
தெற்கு ஆசியாவிலேயே மிகக்குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக இந்த குழந்தை பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சஷிஷா என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது.
இதையடுத்து அந்த மருத்துவமனையின் குழந்தை மருத்துவ வல்லுநர் ரோஜோ ஜாய் தலைமையிலான மருத்துவர்கள் அந்த குழந்தையை தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் தொடர்ந்து 100 நாட்கள் சிகிச்சை அளித்தனர்.
தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்


