Wednesday, April 15, 2026

அமெரிக்க – ஈரானிய சமரச பேச்சு தோல்வி!உலக சந்தையில் எரிநெய் விலை குறையும் வாய்ப்பு தள்ளிப்போகிறது!!

உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க-ஈரானிய சமரசப் பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது; இதனால், ஹொர்முஸ் நீரிணை சிக்கலும் பெட்ரோலிய விலை உயர்வு பிரச்சனையும் தீர்வதற்கான வாய்ப்பு நிச்சயமற்ற நிலையை எட்டி உள்ளது/.

பாகிஸ்தானின் சமரச முன்னெடுப்பிற்கு இணங்கிய அமெரிக்காவும் ஈரானும் முதலில், இரண்டு வாரகால போர்நிறுத்தத்திற்கு சம்மதித்தன. தொடர்ந்து இரு நாடுகளின் குழுக்களும் சமரச பேச்சை மேற்கொள்ள பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத் சென்றன. அங்கு ஏறக்குறைய 21 மணி நேரம் நடைபெற்ற சமரசப் பேச்சு கடைசியில் எந்தத் தீர்வையும் எட்ட முடியாமல் தோல்வியில் முடிந்துள்ளது.;

இதனை, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், செய்தியாளர்களிடம் உறுதிபடுத்திய அத். அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து ஒரு சமரசத்தை எட்டுவதற்கு பாகிஸ்தான் இயன்றவரை முயன்றது; ஆனால், எங்களால் இணக்கமான ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சிக்கல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தர், அமெரிக்கா – இரான் சமரச முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து முனைப்பு காட்டும் என்று தெரிவித்தார்.

இந்த சமரசப் பேச்சு தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவும் ஈரானும் வெவ்வேறு காரணங்களை தெரிவிக்கின்றன. “தங்களின் வரம்பு குறித்தும் எதில் சமரசம் செய்துகொள்ளலாம், எதில் அவ்வாறு முடியாது என்பதை தெளிவுபடுத்திவிட்டோம்; ஆனால் ஈரானோ, எங்களின் நிபந்தனைகளை ஏற்கவில்லை” என ஜேடி.வான்ஸ் கூறியிருந்தார்.

எந்தெந்த நிபந்தனைகள் ஈரானால் நிராகரிக்கப்பட்டன என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வான்ஸ், “பேச்சுவார்த்தை பற்றிய முழு தகவல்களை வழங்க முடியாது. குறிப்பாக, அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம்; அதற்கான முயற்சியிலும் ஈடுபட மாட்டோம் என்கிற உத்தரவாதத்தை ஈரான் தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார்.

“அமெக்க அதிபரின் முக்கியமான இலக்கு இதுதான், அதை நாங்கள் சமரச பேச்சின் மூலம் அடைய நினைக்கிறோம்; அணு ஆயுதத் தயாரிப்பில் மூலப் பொருளான யுரேனியத்தை செறிவூட்டும் ஈற்றானின் திறன் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டது” என்று கூறும் வான்ஸ், எதிர்காலத்தில் எப்போதும் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்கிற உறுதிப்பாட்டை இரானிடம் காணமுஇட்யவில்லை என்றும் தெரிவித்தார்.

சமரசப் பேச்சின்போது, ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில், தங்களின் நிபந்தனைகளை இரான் ஏற்றுக்கொள்ளும் புள்ளியை எங்களால் எட்ட முடியவில்லை.” என்கிறார்.

“நாங்கள் மிகவும் நெகிழ்வுத்தன்மை உடன் நடந்து கொண்டோம் என நினைக்கிறேன். நல்லெண்ணத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைக்குச் சென்று ஒப்பந்தம் மேற்கொள்ள முடிந்தவரை முயற்சிக்குமாறு அதிபர் டோனால்ட் டிரம்ப் எங்களிடம் கூறியிருந்தார். நாங்கள் அதைச் செய்தோம். ஆனால் துர்திருஷ்டவசமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின்போது எத்தனை முறை டிரம்பை தொடர்பு கொண்டீர்கள் என்கிற கேள்விக்குப் பதிலளித்த வான்ஸ், “அதிபருடன் தொடர்ந்து இணைப்பில் இருந்தோம். கடந்த 21 மணி நேரத்தில் எத்தனை முறை பேசினோம் எனத் தெரியவில்லை. பல முறை பேசியிருப்போம்.” எனத் தெரிவித்தார்.

“அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின் தளபதி அட்மிரல் கூப்பர், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு குழுவிடனும் தொடர்பில் இருந்தோம். நாங்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் சமரசப் பேச்சு நடத்தி வந்ததால் தொடர்ந்து இணைப்பில் இருந்தோம்,” என்றும் வான்ஸ் குறிப்பிட்டார்.

“ஒரு புரிதலை எட்ட எளிமையான முன்மொழிவை நாங்கள் ஏற்படுத்தினோம். இது தான் எங்களின் இறுதியான மற்றும் சிறந்த முன்மொழிவு. இதை இரானியர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது இல்லையா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.” எனக் கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்தார் ஜே.டி.வான்ஸ்.

செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானப்படை தளத்திற்குச் சென்ற ஜே.டி.வான்ஸ் அங்கிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார். அவரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷக் தர் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

இரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்காவின் “நியாயமற்ற கோரிக்கைகள்தான் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை சீர்குலைத்ததற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இரான் குழுவின் பல முயற்சிகளைக் கடந்தும் அமெரிக்கா தரப்பிலிருந்து வைக்கப்பட்ட நியாயமற்ற கோரிக்கைகள் தான் பேச்சுவார்த்தை நின்றுபோனதற்கு காரணம். அப்படித்தான் பேச்சுவார்த்தைகள் முடிந்தன,” என இரான் அரசு ஊடகமான ஐ.ஆர்.ஐ.பி வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் தலைமையிலான குழுவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் சென்றன.

இரண்டு குழுவினரும் தனித்தனியாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், வெளியுறவு அமைச்சர் இஷக் தர் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்தனர்.

இந்தச் சூழலில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், தன்னுடைய சமரசப் பணியைத் தொடரப் போவதாகக் கூறியுள்ளது.

முதலில் பாகிஸ்தான் மூலமாக ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் அதன் பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகளின் முன்னிலையில் சுமார் இரண்டரை மணி நேரம் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் பிபிசி உருதுவிடம் தெரிவித்தனர்.

அதன் பிறகு ஒரு மணி நேர இடைவேளைக்குப் பின், ஈரானிய மற்றும் அமெரிக்க வல்லுநர்கள் இடையே உயர்மட்ட பேச்சு இடம்பெற்றது.

பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்காமல் போனதற்கு அமெரிக்காவின் நிலைப்பாட்டில் நெகிழ்வுத்தன்மை இல்லாததுதான் காரணம் என இரானின் தஸ்னிம் செய்தித்தளம் தெரிவிக்கிறது.

அந்த செய்தியில், இரான் தனது முன்மொழிவுகளை மீண்டும் வழங்கி யதார்த்தத்தின் பக்கம் அமெரிக்காவைக் கொண்டு வர முயற்சித்தது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு கட்டத்திலும் அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகள் தான் ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டுவதற்கு தடையாக இருந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான நேரம், இடம் மற்றும் நடைமுறை தொடர்பாக எந்த அட்டவணையும் வெளியிடப்படவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, தற்பொழுது வெற்றிக் கோட்டை எட்டாவிட்டாலும் தொடர்ந்து பேச்சு நடத்த இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை