Wednesday, April 15, 2026

வீட்டிலிருந்து பணி!மலேசியாவில் இன்று ஆரம்பம்!!

எரிநெய்க்கு உலகளாவிய தட்டுப்பாடு, பொருளாதார பாதிப்பு ஆகிய காரணங்க-ளால் வீட்டில் இருந்து பணிபுரியும் நடை முறை இன்றுமுதல் மலேசியாவில் தொடங்குகிறது.

இதனால், இலட்சக் கணக்கானோர் இன்று பயணம் செய்வதைத் தவிர்த்து விட்டு, தத்தம் வீட்டிலிருந்தபடியே, வேலைசெய்யத் தொடங்குகின்றனர். இதில், அரசுசார் பொதுத் துறை ஊழியர்கள் எத்தனை பேர், தனியார் துறை பணியாளர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து இனிமேல்தான் ஓரவேணும் தெரியவரும்.

ஆசிய மண்டலத்தில் ஏற்கெனவே பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ‘இல்லத்திலிருந்து பணி’ நடை முறைக்கு வந்துவிட்டது. இதில், இலங்கை-யின் நிலைமை இன்னும் புதுமையானது. வாரத்தில் ஒருநாள் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டும். வாரத்தில் ஐந்து நாள் வேலை நடைமுறையில் உள்ள அந்தத் தீவு நாட்டில் புதன் கிழமை மட்டுமே அலுவலகத்-திற்கு வர வேண்டும்; அதற்கு முன்னும் பின்-னும் ஈரிரு நாட்கள் என வீட்டில் இருந்தபடியே பணிபுரியும் நடைமுறை அங்கு உள்ளது.

நீண்ட காலமாக உள்நாட்டுப் போருக்கு ஆளான அந்த நாட்டில், தற்பொழுது கையூட்டுக் கலாச்சாரம் உச்சத்தில் இருப்ப-தால், இலங்கையில் பொருளாதார மறு-மலர்ச்சியும் மேம்பாட்டும் ஏற்பட எத்துணைக் காலம் ஆகுமென்று தெரியவில்லை.

மலேசியாவைப் பொறுத்தவரை, இரண்டு நாட்கள் மட்டும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். திங்களும் வெள்ளியும் அலுவ-லகத்திற்குச் செல்ல வேண்டும்; இடையில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் நடைமுறை மலேசியாவில் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

விட்டில் இருந்து பணிபுரியத் தொடங்கும் பணியாளர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமலும் எரிநெய்க்கு(டீசல்-பெட்ரோல்) செலவிடாமலும் பயண அயர்வுக்கு ஆளாக-மலும் தப்பிக்கும் வாய்ப்பு உண்டெனினும் ஒரு சில பணியாளர்கள் வீட்டுச் சுழலின் தாக்கத்தை எதிர்நோக்க்க்கூடும்.

எது எவ்வாறாயினும், கடந்த கொரோனா பருவத்தில் வீட்டில் இருந்து பணிபுரிந்த அனுபவம் மலேசியப் பணியாளர்களுக்கு உண்டென்பதால், எதையு,ம் சமாளிக்கும் ஆற்றலும் கடமையில் கண்ணாக இருக்கும் கண்ணியமும் நிரம்ப உண்டு.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை