
ஐக்கிய குடியரசுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நேற்று புதன்கிழமை இந்த வர்த்தக வளாகத்தை முறையாகத் தொடங்கி வைத்தார்.
அதில் ஒரு பெரிய அரங்கமும் ஆயிரக்கணக்கான வீடுகளும் உள்ளன.
மலேசியாவுக்குச் சொந்தமான YTL குழுமத்தால் கட்டப்பட்ட Brabazon புதிய நகரம், Bristol -South Gloucestershire எல்லையில் அமைந்துள்ளது.
இதில் 6,500 புதிய வீடுகள், 15 ஏக்கர் பூங்கா, கார்பன் நியூட்ரல் அரங்கம், மூன்று பள்ளிகள் உள்ளிட்டவை அடங்கி உள்ளன.
லண்டனில் நேற்று ஜனவரி 15-இல் இதைத் திறந்துவைத்து பேசிய பிரதமர் அன்வார், இங்கிலாந்து-மலேசியாவிற்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு என்றார்.


