
இந்திரா காந்தி உருவாக்கிய வங்க தேசத்-தின் முதல் அமைச்சரவை ‘நினைவில் வாழும்’ முஜிபுர் ரகுமான் தலைமையில் பதவி ஏற்ற நாள் இன்று(1971). இவர் தற்-பொழுது இந்தியாவில் அரசியல் அடைக்-கலம் நாடியிருக்கும் ஷேக் ஹசினாவின் தந்தை ஆவார்.

தமிழ் மண்ணில் இருந்து ஆங்கிலேயரை எதிர்த்து போர் நடத்திய தமிழ் மறவன் தீரன் சின்னமலை பிறந்தநாள் இன்று(1755).

தமிழ் அறிஞர்களால் தமிழ் இமயம் என்று போற்றப்பட்ட வ. சுப. மாணிக்கம் பிறந்தநாள் இன்று(1917); தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழ் வளர்ச்சி-யைப் பற்றியே சிந்தித்து பல நிலையிலும் சிறந்தோங்கி தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர் இவர்.

ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவர் பெஞ்சமின் பிராங்கிளின். இவர் அரசியல் தலைவர் மட்டும் அல்லர்; சிறந்த எழுத்தாளர், அறிவியலாளர்- கண்டுபிடிப்பாளரும் கூட;
மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்-கும் கருத்துகளுக்குமாக இவர் இயல்பியல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அறிவிய-லாளராக கருதப்படுகிறார் ஆங்கில மொழி-யில் இலக்கண வரையறையையும் இவர் ஏற்படுத்தினார். அப்படிப்பட்டவருக்கு இன்று நினைவு நாள் (1790).

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தேர்-தல் பிரச்சாரத்திற்காக விமானத்தில் பய-ணம் செய்த பொழுது மறைந்த நடிகை சௌந்தர்யா. ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நாயகியாக நடித்த இவருக்கு நினைவு நாள் இன்று (2004).

மலேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்-பெற்றுள்ள ஜனநாயக செயல் கட்சியில் தற்பொழுது நிலவுகின்ற சிங் ஆதிக்கத்-திற்கு அடிகோலியவர் இவர்.
அந்தக் கட்சியை இரு தவணைக் காலத்-திற்கு வழிநடத்தியவரும் கூட; மலேசிய நாடாளுமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் வாதத்திறமைக்கு புகழ் பெற்றவராக திகழ்ந்த கர்ப்பால் சிங்கிற்கு இன்று நினைவு நாள் (2014)

தமிழ்த் திரைப்படங்களில் நடிகர் விவேக்-கின் நகைச்சுவை இலஞ்சம், மக்கள் தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்து-ரைப்பதாக இருக்கும்; இதனால் இவர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கும் இன்று நினைவு நாள் (2021)


