
நாட்டின் பல்முனை சார் உருமாற்றத்தில் உலோக மறுசுழற்சி தொழில் துறையினர் அளப்பரிய பங்கை ஆற்றி வருகின்றனர் என்பதை அரசும் சமுதாயமும் அறியும். அதேவேளை அரச உரிமத்துடன் முறையான வகையில் தொழில் செய்கிற மலேசிய இந்திய உலோக மறுசுழற்சி தொழிற்சங்க-மிம்தா உறுப்பினர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரிமம் இல்லாமல் இத்தொழிலை புரிவோராலும் திருட்டுப் பொருள்களை பரிவர்த்தனை செய்வோ ராலும் பெரும் இன்னலை எதிர்கொண்டு வருவதாக மிம்தா பொதுச் செயலாளர் முத்தப்பன் ஊடகத்தாரிடம் தன் ஆதங்-கத்தை வெளிப்படுத்தினார்.

இத்தகைய தரப்பினர்மீது அரச காவல் துறையும் கோலாலம்பூர் மாநகர் மன்றமும் ஏனைய மாவட்ட- ஊராட்சி மன்றங்களும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்ப-தில்லை என்று மிம்தா’வின் இன்றைய வெள்ளிவிழா ஆண்டுக் கூட்டத்தின் பொழுது செய்தியாளர்களை சந்தித்த முத்தப்பன் தெரிவித்தார்.
இதில் இன்னும் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அவ்வப்போது வந்து முறை யான உரிமத்துடன் பணி செய்கின்ற தங்களின் வர்த்தக இடங்களுக்கு வந்து ‘பரிசோதனை’ என்ற பெயரில் அலுவலகத்-திலும் கிடங்கிலும் ஆய்வு மேற்கொள்கின்-றனர்.
அரசு வகுத்துள்ள நெறிமுறையின்படி தொழில் செய்கின்ற எங்களுக்கு இவ்வாறு செய்வது பெரும் இடையூறாக அமைந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் காவல் துறையினர் வரும்பொழுது குறைந்தது 2 மணி நேரம் எங்களின் வர்த்தக நடவடிக்கை பாதிக்கப்பட்டு அதனால் ஏராளமான பொருள் நட்டத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கிறது.

மிம்தாவை சேர்ந்த உறுப்பினர்கள் இதுவரை அப்படி முறைதவறி எந்த வர்த்தகமும் செய்ததாக தகவல் இல்லை; காவல்துறையினரும் இதுவரை அப்படி எவரையும் அடையாளம் கண்டதில்லை.
மூன்று சக்கர வாகனங்களின் மூலம் திருட்டுக் பொருள்களை வாங்கி விற்போரையும் உரிமம் இல்லாமல் உலோக மறு சுழற்சி தொழிலில் ஈடுபடுவோரையும் இனியாவது அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுத்து அதன் மூலம் ‘மிம்தா’ அமைப்பிற்கு உறுதுணையாக இருக்கும்படி சம்பந்தப்பட்ட அரச அமலாக்கத் தரப்பினர் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக முத்தப்பன் மேலும் தெரிவித்தார்.


