Tuesday, April 21, 2026

ஊழலுக்கு எதிரான கருத்தரங்கை காவல்துறையினர் தடுத்தனர்: -மலாயா பல்கலைக்கழக மாணவர்க் குழு முறையீடு!

மலாயாப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்னிரவில் நடைபெறவிருந்த ஊழலுக்கு எதிரான கருத்தரங்கை காவல்துறையினர் தடுத்ததாக, மலாயா பல்கலைக்கழக மாணவர் குழு யுமானி முறையீடு செய்துள்-ளது.

மாணவர்கள் ஒன்று கூடுவதற்கும் கல்விச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பதற்கும் உள்ள உரிமைகளை அடக்கும் வகையில், காவல்துறை-யினரால் அந்த நிகழ்வு சீர்-குலைக்கப்பட்டதாக யுமானி (Umany) குற்றம் சாட்டுகிறது.

மலாயா பல்கலைக்கழக மாணவர் அமைப்பு ‘யுமானி’-Umany சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம் போலீசாரால் தடுக்கப்பட்டதாக குற்றம்-சாட்டப்பட்டுள்ளது.

மலாயாப் பல்கலைக்கழக துங்கு வேந்தர் மண்டபத்திற்கு முன்பு நடைபெறவிருந்த இந்த நிகழ்வை நோக்கி மாணவர்கள் அணிதிரண்ட போது, ஏறக்குறைய 30 போலீசார் அவர்களைத் தடுத்ததாகவும் இதனால் கருத்தரங்கம் நடைபெறவில்லை என்றும் யுமானி அமைப்பினர் தெரிவித்த-னர்.

இருந்தபோதும், மாணவர்கள் அங்கிருந்த-படியே கருத்தரங்கத்தைத் தொடர முயன்ற போது, இரண்டு போலீஸ் வாகனங்கள் விளக்குகளை ஒளிர்த்ததாகவும் இதன் மூலம் உரைகளைத் தடுக்க முயன்றதாகவும் யுமானி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் ஒன்றுகூடும் உரிமையையும் கல்வி சுதந்திரத்தையும் ஒடுக்க முயன்ற-துடன் அச்சுறுத்தும் சூழலையும் உருவாக்கி-யது என அந்த உயர்க்கல்வி மாணவர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரி-விக்கப் பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் ஒன்றுகூடுவதும் கருத்தாடுவதும் அடிப்படை உரிமை; குடிமக்களின் சுதந்திரமும் ஆகும்; இந்த உரிமையைத் தடுக்க அதிகாரி-களுக்கு எந்தச் சட்டப்பூர்வமான காரணமும் இல்லை. மாணவர்களின் கல்வி சுதந்திரத்தை ஒடுக்கக் கூடாது என ‘யுமானி’ சார்பில் வலியுறுத்தப்பட்டு- ள்ளது.

இந்த கருத்தரங்கம் நேற்று ஏப்ரல் 21-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் மலாயாப் பல்கலைக்கழக துங்கு வேந்தர் மண்டபத்-திற்கு முன்பு தொடங்க விருந்தது. இதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அசாம் பாக்கி மீது எழுந்த பங்குதாரர் குற்றச்சாட்டு உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்படவிருந்தன.

இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறை-யிடமிருந்தோ அல்லது மலாயா பல்கலைக் கழக நிருவாகத் தரப்பிலிருந்தோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை