
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய நெருக்கடி, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ஷா ஆலம் விளையாட்டரங்க கட்டுமானம் முழுமை பெறாத நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 22ஆவது மலேசிய விளையாட்டுப் போட்டியை (SUKMA) ஒத்திவைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் பரிந்துரைத்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை பெரிதும் வரவேற்பதாக மக்கள் முற்போக்கு கட்சி-பிபிபி சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநிலத்தில் 53 இடங்களில் சுக்மா போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே இதை கருத்தில் கொண்டு சுக்மா போட்டியை ஒத்தி வைப்பது நல்லது என்று அவர் சுட்டிக்காட்டினார்.


