Sunday, April 26, 2026

புக்கிட் பெருந்தோங் ‘BONDA JUWANDA’ சமூக நல இல்லத்தில் டாக்டர் சத்திய பிரகாஷ் கட்டணமில்லா மருத்துவ சேவை!

ரவாங், பண்டார் புக்கிட் பெருந்தோங், பிரிவு பிபி1, எண் 9 ஜாலான் 1பி என்னும் இடத்தில் அமைந்துள்ள
‘BONDA JUWANDA’ என்னும் சமூக நல மையத்தில் டாக்டர் சத்திய பிரகாஷ் மருத்துவ உபகரணங்களை வழங்கி மருத்துவ சேவையையும் இலவசமாக வழங்கினார்.

மருத்துவ தொழிலில் பரந்த அனுபவத்தை கொண்டிருப்பவரும் உலு சிலாங்கூர் மாவட்ட அளவில் வட்டார அரசியல் தலைவராக விளங்குபவரும் தொடர்ந்து சமூகநல சேவை வழங்கி வருவதால் அனைத்து சமூகத்திலும் நன்கு அறியப்பட்ட வருமான டாக்டர் சத்திய பிரகாஷ் மருத்துவ சேவை அடிப்படையில் இந்த சமூக நல மையத்தை சுகாதார சேவை அடிப்படையில் தற்காக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி கட்சி-பிகேஆர் உலு சுலாங்கூர் தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் சத்திய பிரகாஷ், பெரியவர்கள் முதல் இரண்டு வயது குழந்தை வரை ஏறக்குறைய 30 பேர் அடைக்கலம் நாடி உள்ள இந்த மையத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு திரவ உணவைக் கூட அருந்த முடியாத நிலையில் இருந்தவர்களுக்கு அதற்கான மருத்துவ குழாயை இன்று வழங்கினார்.

அத்துடன், இரத்தத்தில் சர்க்கரை அளவை சரிபார்க்கும் கருவி, உடல் எடையை அளவிடும் கருவி, சக்கர நாற்காலி போன்ற உபகரணங்களை கட்டணம் இன்றி வழங்கினார் இன்று.

இதன் தொடர்பில் அந்த மையத்திலேயே செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சத்திய பிரகாஷ், சமூகநல மையத்தில் அடைக்கலம் நாடி உள்ள அனைவருக்கும் கட்டணம் இன்றி மருத்துவ சேவையை வழங்கப் போவதாகவும் இன்று அறிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை