
அரச அனுமதி பெறாமல் அல்லது சங்க பதிவகத்தில் பதிவு செய்யாமல் மாநிலத்தில் இயங்கி வரும் 688 இந்து கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை சிலாங்கூர் அரசு அடையாளம் கண்டுள்ளதாக ஆட்சி குழு உறுப்பினர் வி. பப்பா ராயுடு தெரிவித்-துள்ளார்.
அரச நிலத்தில் அனுமதியின்றி 433 கோயில்-களும் தனியாருக்குச் சொந்தமான நிலத்-தில் 255 கோயில்களும் கட்டப்பட்டுள்ளன என்று நேற்று மாநில சட்டமன்றத்தில் அறிவித்தார் பாப்பா ராயுடு. மாநில சட்ட மன்ற கூட்டம், தற்பொழுது நடைபெற்று வருகிறது..
அரசு நிலத்தில் கட்டப்பட்டவற்றில், அதிக-பட்சமாக 96 ஆலயங்கள் பெட்டாலிங் மாவட்-டத்திலும் அதைத் தொடர்ந்து கோல சிலாங்-கூர் (81), கோம்பாக் (57), உலு லங்காட் (55), கிள்ளான் (45), கோலா லங்காட் (36), சிப்பாங் (34) உலு சிலாங்கூர் (29) ஆகிய மாவட்டங்க-ளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் நிலங்களில் அனுமதியின்றி மொத்தம் 255 கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் கோல சிலாங்கூரில் 126, அதனைத் தொடர்ந்து கோல லங்காட்டில் (38), சிப்ங்கில் (28), உலு சிலாங்கூரில் (22), கிள்ளானில் (20), உலு லங்காட்டில் (12), பெட்டாலிங்கில் (8), சபா பெர்னாமில் (2), கோம்பாக்கில் ஓர் ஆலயம் என்று நேற்று ஷா ஆலமில் நடை பெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் கூறினார்.
சிலாங்கூரில் உள்ள ஒன்பது மாவட்ட நில அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மாநிலத்தில் சட்டப்பூர்வமாக கட்டப்பட்ட 285 இந்து கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் பாப்பா ராயுடு மேலும் கூறினார்.
முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்-களுக்காக மாநில அரசு பல இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இருப்பினும், திட்டமிடல், சம்பந்தப்பட்ட இடங்-களின் சுற்றுச்சூழல், உள்ளூர் சமூகத்தின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மாநில அரசு அடையாளம் கண்டுள்ள இடங்களை மதிப்பாய்வு செய்து வருவதாக-வும் அவர் தெரிவித்தார்
நீண்ட காலமாக செயல்படும் அதேவேளை அரசிதழில் வெளியிட முடியாத வழிபாட்டுத் தலங்களை இடமாற்றம் செய்யும் நோக்கில் இந்த நிலப்பகுதிகளைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.
“சமூக நல்லிணக்கத்தைப் பேணிக்காக்கும் அதே வேளையில், சட்ட நடைமுறைக்கு உகந்த ஒரு தீர்வை உறுதி செய்வதற்காக நாங்கள் இந்த அணுகுமுறையை மேற்-கொள்கிறோம்” என்று லிமாஸ் எனப்படும் முஸ்லிம் அல்லாத மதங்களுக்கான சிறப்பு மாநிலக் குழுவின் இணைத் தலைவராகவும் இருக்கும் பாப்பா ராயுடு கூறினார்.


