
பண்டார் சௌஜானா புத்ரா பகுதியில் மஇகா மக்கள் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
கோல லங்காட் தொகுதியில் அமைந்துள்ள இக்கிளை, கிளைத் தலைவர் குமரன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புறநகர்ப் பகுதியாக இருந்தாலும், அனைத்து இன மக்களுக்குமான சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான டியூஷன் வகுப்புகள், தேவார திருமுறை ஓதுதல், சமய நன்னெறி வகுப்புகள் ஆகியவை வார விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மக்கள் சேவை மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதுது.
மஇகா கல்விக்கரமான எம்.ஐ.இ.டி. சார்பில் கடந்த ஆண்டில் மட்டும் இந்திய மாணவர்களுக்கு வெ.18மில்லியன் அளவிற்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தியர்களுக்கான கல்வி மற்றும் சமூக சேவையை வழங்குவதில் மஇகா எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
2025 எஸ்பிஎம் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜிவித்தேஷ் மாரிமுத்து (7-ஏ), சஷ்வின் (7-ஏ), பிரித்ரா பிரகாஷ் ராவ் (9-ஏ) ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.
மஇகா தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் எல். சிவசுப்பிர மணியன், சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோ சங்கரன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


