
உலக இலக்கிய மேடையில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்திக் கொடுத்த ஓலைப் பெட்டகம் திருக்குறள்; அதுதான் ‘தமிழ் மாணவன்’ என்ற முத்திரையுடன் மண்ணறையில் நீள்துயில் கொண்டுள்ள கால்டுவெல் பாதிரியார், பொதுவுடைமைக் கொள்கையின் பெருநிலமாக ஒருகாலத்தில் இருந்த ரஷ்ய தேசத்தின் அரசியல்-கல்வி-யியல்-தத்துவ மேதை, நனிசிறந்த எழுத்தாளர் கோமகன் லியோ டால்ஸ்டாய்;
(‘போரும் அமைதியும்’ என்னும் மாபெரும் இலக்கியப் பெட்டகத்தை சமைத்ததற்காக 1902 முதல் 1906-ஆம் ஆண்டுவரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ‘இலக்கிய நோபல்’ பரிசுக்காக இவரின் பெயர் பரிந்துரைக்கப் பட்டும் அது கிட்டாமல் போனது; அதைப்போல, 1901, 1902 ஆகிய ஈராண்டுகளில் உலக அமைதிக்கான நோபல் பரிசுக்காக இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, அதுவும் எட்டாமல் போனது;
ஆனாலும், உலக இலக்கிய மேதையர் நடுவே நிரந்தர இருக்கை இக்கோமனுக்கு உண்டு; உயர்க் குடியில் பிறந்து அலுங்காமல் குலுங்காமல் அமைதி வாழ்க்கை வாழும்பேறு கிட்டினாலும் அதைக் கருதாது, உலக மக்களின் மேன்மைக்கு தன் சொல்லாலும் செயலாலும் பேனா முனை-யாலும் பெரும்பாடாற்றியவர் டால்ஸ்டாய்;
அத்தகைய டால்ஸ்டாய், உலக அமைதியின் சின்னம் அண்ணல் காந்தி அடிகள், பாரதி-யார் உள்ளிட்ட பெருமக்களை யெல்லாம் இணைத்த நூல் திருக்குறள்.

அதைப்போல, மலேசியத் தமிழர்களை உலக அளவில் இணைக்கும் தமிழ்ச் சங்கிலியாக ஒவ்வொரு நாடாகப் பறந்துவரும் மலேசிய சொல்வேந்தர், எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்-தின் இணைவேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் ஈழ மண்ணில் மேத் திங்கள் 2-3ஆம் நாட்களில் நடைபெறும்-நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்னொரு மலைநாடான இலங்கைக்குச் சென்றிருக்கிறார்.
அவ்வண்ணம் சென்ற அவர், இந்த நேரத்-தில்.. ., சற்று முன்னேரத்தில் பாஜக தமிழ் நாட்டுத் தலைவர்களில் ஒருவரான அண்ணாமலையுடன் இலங்கை நாட்டின் அதிபர் மாளிகையில் சிறப்பு விருந்தினராக உள்ளார்.





