Thursday, March 19, 2026

திருப்பத்தூர் சிராவயல் மஞ்சுவிரட்டில் நேர்ந்த துயரம்:நீரில் மூழ்கி காளையும் பலி; காளையரும் பலி!!

சிவகங்கை சீமை, திருப்பத்தூரைச் சேர்ந்த சிராவயல் மஞ்சுவிரட்டுப் போட்டியில் கலந்துகொண்ட காளைகளில் ஒன்று மருண்டு, திசைமாறிய பறவையைப்போல வழிதவறிப் பாய்ந்ததில், எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கண்மாய்க்குள் பாய்ந்து, இறந்தது;

இக்காளையைக் காப்பாற்ற, தைனீஸ் ராஜா என்ற உரிமையாளரும் நீரில் குதித்துள்ளார். நடுவிக்கோட்டையைச் சேர்ந்த இவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.


எதிர்பாராத விதமாக மஞ்சுவிரட்டுப் போட்டிக் காளையும் காளையின் உரிமையாளரான காளையும் இறந்தது பெரும் அதிர்ச்சியையும் துயரையும் ஏற்படுத்தி உள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை