Monday, May 4, 2026

பிரிக்பீல்ட்ஸ் கற்பக விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் குருபூஜை! !

பிரிக்பீல்ட்ஸ் கற்பக விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பெருமானுக்கு மே முதல் நாளில் குருபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தலைநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரிக்பீல்ட்ஸ் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் தொழிலாளர் தினத்தில் அகத்தியர் பெருமானுக்கு சிறப்பு பூஜை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அகத்தியர் பெருமானுக்கு இந்த சிறப்பு பிரார்த்தனையும் பூசையும் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அகத்தியர் அருள் ஞான சபை தலைவரும் அகத்தியர் பெருமானின் தொண்டருமான எஸ். பக்தவச்சலம் தெரிவித்தார்.

காலை7:00 மணிக்கு மேல் 108 சங்காபிஷேகத்துடன் ஹோம பிரார்த்தனை நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

அகத்தியர் பெருமானை வழிபடும் தொண்டர்கள் பெரும் அளவில் ல் கலந்து கொண்டனர்.

மதியம் 12:30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னம் பரிமாறப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆலயத்தில் அகத்தியர் குருபூஜை விழா மற்றும் அகத்தியர் சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது என்று பக்தவச்சலம் தெரிவித்தார்.

இதனிடையே இன்றைய விழாவில் முக்கிய பிரமுகராக கலந்து கொண்ட
செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் கிருஷ்ணா தலைமையில் அகத்தியர் குருபூஜையை சிறப்பாக நடத்தினர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை