Monday, September 21, 2026

எங்கு தொட்டாலும் தமிழ்நாடு கடிக்குதடா ராமா! -சனாதன ஆர் எஸ் எஸ் பாஜக நாக்பூரில் புலம்பல்!!

பால் பருவம் வண்ணம் வடிவம் என்னும் கூறுகளை உள்ளடக்கிய மாந்த வாழ்வில் சமத்துவம்;
உண்ணல்-உடுத்தல்-உறங்கலுக்குத் தேவையான பொருளியலில் பொது வுடைமை;
நீர்-நிலம்-காற்று-வானம்-நெருப்பு உள்ளிட்ட ஐங்கூறுகளை மனித குலத்திற்கு கட்டணமின்றி அளித்திடும் இறைமைக்கு நன்றி பாராட்டும் தமிழர்தம் ஆன்மிக வாழ்வில், இடையில் வந்து அடிமைப் படுத்திய ஆரியம் என்னும் பிராமணியத்தை எதிர்த்தல்;
தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்னும் உரிமை அரசியல்..

ஆகிய கொள்கையுடன் தமிழர்தம் தலைநிலைத்தில் நூற்றாண்டுக்கும் மேலாக நிலைத்திட்ட திராவிட கொள்கையை எதிர்க்கும் திராணியின்றி தவித்திட்ட சனாதன ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அதன் அரசியல் கிளை பாஜகவிற்கும் தற்பொழுது மீண்டும் சிக்கல் எழுந்து, ஆப்பசைத்த குரங்கின் நிலைக்கு ஆட்பட்டுள்ளன.

கடந்த 60 ஆண்டுகளாக, தொடர்ந்து ஆண்டுவந்த திராவிட இயக்கத்தை, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் சூழ்ச்சியால் வீழ்த்தி, ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றிவிட்ட மிதப்பில் திளைத்த பாஜக-விற்கு, அடுத்த இரு நாட்களில் இன்னோர் இன்ப அதிர்ச்சியும் வாய்த்தது.

ஆனால், அடுத்த நாளே, ஆப்பசைத்த குரங்கின் நிலைக்கு ஆட்பட்டுவிட்ட பாஜக புதுடில்லி மேலிடம், விஜய்யை முதல்வராக பதவியேற்க வைப்பதா அல்லது இப்படியே கழற்றி விடுவதா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.

திமுக ஆட்சியை பதவியில் இருந்து வஞ்சகத்தின் துணைகொண்டு இறக்கியதுடன் அன்றி, அந்தக் கூட்டணியையும் உடைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியில் ஊடுறுவியுள்ள தன்னுடை ஆர்.எஸ்.எஸ்.காரதுகளின் துணையோடு திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசைப் பிரித்து, அந்தக் கூட்டணியை உடைத்துவரை சரி;

ஆனால், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரசை இடம்பெற வைத்தால், 60 ஆண்டுகள் கழித்து தமிழ் நாட்டு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற தாமே வழிவகுத்ததாக ஆகிவிடுமே;

இதற்காகவா நாம் தமிழ் நாட்டில் இத்தனைக் காலமும் தலைகீழாக நின்று அநியாய அக்கிரமத்துடன் அரசியல் செய்கிறோம். தமிழ் நாட்டு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றால், அதன் நேரடி பாதிப்பும் பலவீனமும் நமக்குத்தானே என்று பாஜக தரப்பு கலங்கி நிற்பதுடன் அதுவும், நாமே இதற்குக் காரணமாக அமைந்துவிடலாமா என்ற கேள்வியுடன் கடந்த 3 நாட்களாக தலைமைப் பிய்த்துத் கொண்டு திரிகிறது புது டில்லி பாஜக தலைமை.
இதன் விளைவாகவே, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், விஜய்யை பட்டைக் கிளப்பிவிட்டார்; காவல் துறை பாதுகாப்பையும் மீட்டுக் கொண்டார்.

நிறைவாக-உறுதியாக, 118 பேர் ஆதரவு இருந்தால் மீண்டும் இந்தப் பக்கம் தலைகாட்டு; இல்லாவிட்டால் வேறு வேலையைப் பார்; தனக்கு திருவனந்தபுரத்தில் ஏராளமான வேலை காத்திருக்கு என்று தவெக தலைவர் விஜய்யிடம் சொல்லாமல் சொல்லிவிட்டார். கிளம்பியும் விட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை