
எம் ஜி ஆர் 108- ஆவது பிறந்த நாள் விழா, அவர் பிறந்த நாளான இன்று ஜனவரி 17இல் கோலாலம்பூர் டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்குப்பின் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக இவ்விழா நடைபெற்றது.
மலேசிய முதல் எம்ஜிஆர் தங்கராஜ் போன்ற களைஞர்களின் அபிநயம்,
வளர்மதி நடேசன் உள்ளிட்ட களைஞர்களின் பாடல் என அதிகமான கலைஞர்களின் படைப்பில் எம்ஜிஆர் ரசிகர்களும் அபிமானியரும் மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு சார்பில் பேசிய எஸ்.பி.
மணிவாசகம், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அணிதிரண்டு வந்த எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


