Wednesday, May 13, 2026

அமைச்சர் கோபிந்த் சிங் தலைமையில் அன்னையர் தினத்தோடு மஸ்ஜித் இந்தியா தேவிஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் மே 10-
நாட்டில் மிகவும் பிரபலமான
ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூசைகளுக்கு பின்னர் இன்று 133 ஆம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்தேறியது.

காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகேஷ்வர பூசைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

கடந்த ஆண்டை போலவே இவ்வாண்டும் கோவில் திருவிழாவில் ஜசெக தலைவரும் டிஜிட்டல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.

அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் சிறப்பு அதிகாரி சுரேஸ் சுங், பத்திரிகை செயலாளர் கபிலன், தமிழ் பிரிவு பத்திரிகை அதிகாரி சந்திரகலா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கோவில் நிர்வாகத்தின் சார்பில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தம்பதியருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

மேலும் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர் களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

அன்னையர்களுடன் இணைந்து அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இதனிடையே கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கி உள்ள புதிய இடத்தில் இப்போது கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த புதிய இடத்தையும் அமைச்சர் கோபிந்த் சிங் பார்வையிட்டார்.

கோவில் தலைவர் பார்த்திபன் கட்டுமான பணிகள் குறித்து அமைச்சருக்கு விளக்கம் அளித்தார்.

செய்தி: செ. வே. முத்தமிழ் மன்னன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை