
2026 ஏப்ரல் 23 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 17 வது தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் மே 4 நான்காம் நாள் அறிவிக்கப்பட்டு
13 வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி ஜோசப் விஜய் இன்று 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பொறுப்பு ஏற்று உள்ளார் அவருக்கு திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சி ஏ சத்யா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் ஆண்டாண்டு காலமாக மரபுவழியாக அரச விழாவில் பின்பற்றி வரும் நடைமுறையின்படி, அரச விழாக்களில் செம்மொழியாம் தமிழ்த் தாய் வணக்கப்பாடல் பாடி முடித்து நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண் இசைப்பது வழக்கம்; அதற்கு மாறாக இன்று புதிய அரசு பொறுப்பேற்ற விழாவில் சமஸ்கிருத மொழியில் வந்தேமாதரம் பாடப் பட்டு வங்க மொழியில் நாட்டுப் பண் இசைக்கப்பட்டு தமிழாய்ந்த தமிழ் நாட்டின் உயர்தனி செம்மொழியாம் தமிழ்த் தாய் வாழ்த்து இறுதியாக பாடப்பட்டது கண்டனத்திற்கு உரியது என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மகன் மல்லை சத்தியா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மும்மொழி கொள்கைக்கு வழிவகுத்து தமிழை மூன்றாவது மொழியாக ஆக்கும் ஒன்றிய பாஜக அரசின் திட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவதில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி பொறுப்பு ஏற்கும் முதல் நாளிலேயே ஒன்றிய பாஜக அரசு வெற்றி பெற்று உள்ளது
இதை புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் ஒன்றிய பாஜக அரசு மும்மொழி கொள்கையை எந்த விதத்தில் கொண்டு வந்தாலும் அதை கடுமையாக எதிர்த்து போர்க்கோலம் பூண்டிட வேண்டும். தமிழாய்ந்த தமிழ் நாட்டில் தமிழே முதலிடமாக இருக்க வேண்டும் என்று திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக மல்லை சத்தியா மேலும் தெரிவித்துள்ளார்.


