
கிள்ளான் பள்ளத்தாக்கில்பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி எழுச்சியுடன் நடைபெற உள்ளது.
இந்தக் காற்பந்து போட்டியில் 99 தமிழ்ப்பள்ளிகளை சேர்ந்த ஏறக்குறைய 1,500 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இந்த 22ஆவது கால்பந்து போட்டி தமிழ்ப்பள்ளிகளுக்-கிடையே நடத்தப்பட்டவுள்ளது.
இம்முறை, சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 65 ஆண்கள் அணிகளும் 34 பெண்கள் அணிகளும் இப்போட்டியில் களம் காணவுள்ளதாக சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.

இப்போட்டி வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8:00 மணி முதல் ஆர்ஆர்ஐ திடலில் நடைப்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் போட்டியை சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்றமும் இணைந்து நடத்துகிறது.
ஆண்களுக்கான அணிகளில் முதல் 16 இடங்களில் வெற்றிப்பெறும் அணிகளுக்கு பரிசும் பதக்கமும் வழங்கப்படவுள்ளன.
முதல் நிலையில் வெற்றிப்பெறும் அணிக்கு ‘நமசிவாய’ சுழற்கிண்ணம் வழங்கப்படும்.
பெண்களுக்கான அணிகளில் முதல் 12 இடங்களில் வெல்லும் குழுக்களுக்கு பரிசுடன் பதக்கமும் வழங்கப்படும்.
மகளிர் பிரிவின் வெற்றிக் குழுவிற்கு ‘ரவிந்திரன்’ சுழற்கிண்ணம் வழங்கப்படும் என அவர் மேலும் சொன்னார். இந்தப் போட்டிக்கான அணிகளைப் பிரிப்பதற்கான குலுக்கல் இன்று சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டி தொடர்பில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் அனைத்துத் தரப்பினரும் அபரிமிதமாக வழங்கிவரும் ஆதரவு மிகவும் ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது என்று பத்துமலை தெரிவித்தார்.


