
ரஃபிஸி ரம்லியும் அன்வார் பாணியில் இந்திய சமுதாயத்தை ஏமாற்றப் பார்ப்பதற்கு, இந்திய சமுதாயம் என்ன பகடைக்காயா என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி உதவித் தலைவர் டத்தோ எஸ். செல்வம் வினாத் தொடுத்துள்ளார்.
பல இன அரசியல் என்ற பெயரிலும் சீர்திருத்த- ‘Refomasi’ முழக்கத்தை முன்வைத்தும் எம்ஜிஆர் பாட்டுக்கு நடனமாடியும் இந்திய சமுதாயத்தை வளைத்த அன்வார், பதவிக்கு வந்ததும் இந்தியர்களுக்கு பச்சை துரோகத்-தைப் பரிசாகத் தந்தார். அப்படிப்பட்ட அன்வாருடன் கைகோத்து இத்தனைக் காலமும் பயணம் செய்த ரஃபிசி ரம்லி, அன்வாருடன் பிணக்கு ஏற்பட்டு தனி அரசியல் பயணம் மேற்கொள்ளும் இப்போதைய சூழலில், விஜய்யின் முகத்தைக் காட்டி, இந்திய சமுதாயத்தை வளைக்கப் பார்ப்பது பச்சை-யான சந்தர்ப்பவாதம் என்று செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார் ர்.
ரஃபிஸி, பொருளாதார அமைச்சராக இருந்தபொழுது, இந்திய சமுதாயத்திற்காக என்ன செய்தார்? ஏதும் சிறப்புத் திட்டத்தை அறிவிக்காவிட்டலும் இந்தியர்களுக்கான சமூக-பொருளாதார-கல்வி மேம்பாடு தொடர்பாக சிற்சிறு அணுகூலத்தைக்கூட செய்யாதவர்.

குறிப்பாக, இவர் பொருளாதார அமைச்சராக இருந்தபொழுது நடைமுறைக்கு வந்த 13-ஆவது மலேசிய பெருந்திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்காக சிறப்புத் திட்டத்தை இணைத்துக் கொள்ளும்படி மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி பல கடிதங்களை அனுப்பியும் அவற்றை அடியோடு புறக்கணித்தவர் இதே ரஃபிஸி.
இப்பொழுது, அன்வாருடன் பிணக்கு ஏற்பட்டு, தனிக் கட்சி மூலம் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியதும் விஜய் படத்தைக் காட்டி, இந்திய இளம் வாக்காளர்களைக் கவரப் பார்ப்பது, இன்னொரு துரோக அரசியலின் தொடக்கம் என்பதால், இதற்கு இந்திய சமுதாயம், குறிப்பாக இளம் வாக்காளர்கள் இந்த சந்தர்ப்பவாத அரசியல் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று செல்வம் எச்சரித்துள்ளார்.
மலேசிய இந்திய பாரம்பரிய வர்த்தகம் சார்ந்த தங்க ஆபரணத் தொழில், ஜவுளித் தொழில், உணவகத் துறை, முடிதிருத்துவோர் நிலைய உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட தொழில்கள், தொழிலாளர் பற்றாக்குறையால் தடுமாறியபோது, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமர்த்துவதற்காக அனுமதிக்கும்படி அரசிடம் கோரிக்கை வைத்தனர்; அப்போது, சம்பந்தப்பட்ட உள்துறையும் மனிதவள மேம்பாட்டுத் அமைச்சும் பதில் சொல்வதற்குமுன், முந்திக்கொண்டு மறுப்பு தெரிவித்தவர் பொருளாதாரா அமைச்சராக இருந்த இதே ரஃபிஸி ரம்லிதான் என்று டத்தோ செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் ரஃபிஸி ரம்லியை அடையாளம் காட்டிள்ளார்.


