Thursday, April 2, 2026

தெக்குன் கடன் மூலம் இந்தியர்களை கடன் பாதாளத்தில் தள்ளுகிறதா மடானி அரசாங்கம்?

கோலாலம்பூர், ஜனவரி 19:
தெக்குன் கடன் மூலம் மலேசிய இந்திய சமுதாயத்தினரை கடன் பாதாளத்தில் தள்ளிவிட மடாணி அரசு முயற்சி மேற்கொள்கிறதா என்று மலேசிய முன்னேற்ற கட்சி எம் ஏ பி ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் வினா தொடுத்துள்ளார்

தெக்குன் கடன் வசதி 100 மில்லியன் வெள்ளியினால் இந்திய சமுதாயம் எந்த வகையில் பயன் அடையம் என்பதற்கு மடானி அரசு விளக்கம் அளிக்க முடியுமா?

ரமணனும் ஒற்றுமை மடாணி
அரசாங்கத்தில்
உள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய சமுதாயத்திற்கு வழங்கும் வர்த்தக கடன் வசதியை, மலாய் சமுதாயத்திற்கு வழங்கப்படுகின்ற (Skim Perangsang Ekonomi Bumiputra) பூமிபுத்ரா பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தைப் போல வழங்க வேண்டும் என்று ஏன் அக்கறைப் படுவதில்லை?

Skim Perangsang Ekonomi Bumiputra என்னும் திட்டத்தின் மூலம் மலாய் தொழில் முனைவோர்கள் வெள்ளி 20 லட்சம் வரை மானியமாக பெற முடிகிறது; கடனாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது

தெக்குன் கடன்வசதி இந்திய சமுதாயம் பொருளாதார மீ ட்சி பெறுவதற்கான நடவடிக்கையாக இல்லாமல் அவர்களை மேலும் கடன் வலையில் சிக்க வைப்பதைப் போல உள்ளது. அதேவேளை, தெக்குன் கடன் பெற ஹலால் சான்றிதழ் அவசியம் என்பது, பி-40 பிரிவை சேர்ந்தவர்கள் இத்தகைய கடனைப் பெற முடியாதபடி செய்கின்ற சூழ்ச்சி ஆகும்

13-வது மலேசியத் திட்டம் தொடர்பாக ஹின்ட்ராப் இயக்கமும் மலேசிய முன்னேற்ற கட்சி எம்ஏபியம் வைத்துள்ள கோரிக்கையை திசைதிருப்பும் விதமாக அறிக்கை வெளியிடுவதை விடுத்து ரமணனும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய சமுதாயத்திற்கு ஆக்ககரமான திட்டங்களை வகுப்பதன் தொடர்பில்
பிரதமரிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் மோகன் எல்லப்பன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை