
மலேசிய இந்துப் பெருமக்களின் சமய மையமாக பத்துமலை திருமுருகன் திருவாலயம் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்று 2025 ஜனவரி 19-ஆம் நாள் கலாச்சார மையத்தையும் கண்டுள்ளது.
கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா தலைமையில் இந்தக் கலாச்சார மையம் திறக்கப்பட்டது.
இதில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஶ்ரீ மு.சரவணன், தேவஸ்தான அறங்காவளரும் டி.எஸ்.கே. அமைப்பின் தலைவருமான டத்தோ ந சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்களுடன் ஏனைய அரசியல், ஆன்மிகத் தலைவர்களும் சமய அன்பர்களும் பொதுமக்களும் ஏராளமாக கலந்து கொண்டனர்.


