Sunday, June 7, 2026

ஜொகூர்-நெகிரி சட்டமன்ற தேர்தல்களில் ஈரிரு தொகுதிகளில் போட்டியிட பிபிபி விருப்பம்: -டத்தோ டாக்டர் லோக பாலமோகன்!

ஜொகூர் மாநிலத் சட்டமன்றத்திற்கு விரைவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் மக்கள் முற்போக்கு கட்சி-பிபிபி இரு தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது; அதேவேளை இதன் தொடர்பிலான முடிவை தேசிய முன்னணி தலைமையிடமே பிபிபி விட்டுவிடுகிறது என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தெரிவித்துள்ளார்:

ஜோகூர் மாநில சட்டப்பேரவை அண்மையில் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 16வது சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிபிபி, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கை குறித்து அண்மையில் ஜோகூர் மாநில தேசிய முன்னணி தலைவரும் மந்திரி பெசாருமான(முதல்வருமான) டத்தோ ஓன் ஹஃபிஸ் கனி’யிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இருப்பினும், எந்தவித அழுத்தமும் கொடுக்கா-மல், இறுதி முடிவை முழுமையாக தேசிய முன்னணி தலைமையிடம் விட்டுவிட்டதாக அவர் கூறினார்.

ஒருவேளை பிபிபி போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும்கூட, தங்களின் கட்சி தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதுடன் அதன் வெற்றிக்காக களப் பணியாற்றும் என்றும் உலோக பாலமோகன் உறுதியளித்துள்ளார்.

தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தல் இயந்திரம் தேசிய முன்னணிக்கு ஆதரவாக ஏற்கனவே முடிக்கி விடப்பட்டுள்ளது, தேசிய முன்னணி போட்டியிடும் தொகுதிகளில், தங்கள் கட்சித் தலைவர்கள் அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜொகூர் மாநிலத்தைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் அடுத்த சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இங்கும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு குறித்து பிபிபி பரிசீலித்து வருகிறது.

இதன் தொடர்பில் நெகிரி செம்பிலான் மாநில தேசிய முன்னணி தலைவர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என டத்தோ லோக பால மோகன் ஊடகத்தாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை