Tuesday, August 4, 2026

கோலாலம்பூர்-சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் மாற்றம் நிச்சயம்! -மாறன் உறுதி!!

கோலாலம்பூர் ஜூன் – 13

கோலாலம்பூர் -சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்க நிருவாகக் குழுவிற்கு நாளை ஞாற்றுகிழமை 2026-28 தவணைக்கான தேர்தல் நடைப்பெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், மலேசிய இந்திய சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் நன்கு அறிமுகமான கவி மாறனும்(அன்புள்ள மாறன்) போட்டியிடுகிறார்.

வானொலி அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சி நெறியாளராகவும் விளங்குமாறன்,
முதல் முறையாக, அதுவும் உதவித் தலைவர் பதவிற்கு போட்டியிடுகிறார்.

திரைத்துறை, வர்த்தகம், ஆன்மீகம் என தனக்கு உள்ள பிரபலத்தின் மூலம் சமுதாயத்திற்கு பல தொண்டுகளை செய்துவரும் மாறன், இளைஞர்களுக்கு வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும் அதேநேரத்தில் கலைஞர்களுக்கு அரசாங்கத்தில் இருக்கும் வாய்ப்பை அமைத்து கொடுக்கவும் அவர்களின் குரலாக ஒலிக்கவும் ஒரு மத்திய நபராக தனது அடுத்த பயணத்தை தொடங்க போட்டியிடுவதாக தெரிவித்தார்.

எனது முகம் மக்களுடன் நல்ல பரீட்சையமான முகம் அவர்களுடம் எப்போதும் இருக்கும் நான் சமுதாயத்தின் தேவையை அறிந்து. அவர்களுக்கு வாய்ப்புகளையும் அதே நேரத்தில் என் துறையான கலை துறைக்கும் புது புது வாய்ப்பு, குறிப்பாக அரசாங்க வாய்ப்பு கதவுகளை அவர்களுக்கு திறந்து வைக்க இந்த முறை போட்டியிடுவதாக மாறன் தெரிவித்தார்.

எனக்கு இந்த முறை கோலாலம்பூர் சிலாங்கூர் வர்த்தக சங்க உறுப்பினர்கள் வாய்ப்பு கொடுங்கள் மாறன் வந்தால் மாற்றம் உண்டு என்ற வாக்குறுதியை நான் கொடுக்கிறேன் என மாறன் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை