Wednesday, June 24, 2026

ரஃபிசி ரம்லி பம்மாத்து!-இந்தியர்கள் ஏமாறும் வரலாறு இனியும் தொடரக்கூடாது!!

மித்ராவிற்கு பதில் ‘தேவை அடிப்படையில்’ அனைவருக்கும் உதவி என்று இந்தியர்களிடம் பசப்புமொழி பேசும் ரஃபிசி ரம்லியிடம்
இந்திய சமுதாயம் குறிப்பாக வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று
மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. கெடா மாநிலத் தலைவர் அ. விவேகானந்தன் எச்சரித்துள்ளார்.

“பெர்சம-BERSAMA கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதன் தலைவர் ரஃபிசி ரம்லி இந்திய வாக்காளர்களைக் கவர்வதற்-காக ஏதேதோ பேசி வருகிறார். அதில் ஒரு கூறாக, இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்-களுக்கு மித்ரா போன்ற அமைப்பிற்கு பதிலாக தேவை அடிப்படையில் அனைவருக்கும் உதவி வழங்கலாம் என்று புதுச்சரடு விட்டு, ஏமாற்ற பார்க்கிறார்”.

ரஃபிசி பொருளாதார அமைச்சராக இருந்த பொழுது இந்திய சமுதாயத்தைப் பற்றி சிறிதளவும் கருதவில்லை; குறிப்பாக 13வது மலேசிய பெருந்திட்டம் இவருடைய தலைமை-யில் தான் நிறைவேற்றுபட்டது. அதில் இவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தும் இந்திய சமுதாயத்திற்-காக ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத இவர், இப்பொழுது அரசாங்கத்தில் இருந்து விலகி பி கே ஆர் கட்சியில் இருந்தும் ஒதுங்கி தனி கட்சி தொடங்கிய நிலையில் இந்திய சமுதாயத்தின் பால் கரிசனம் காட்டுவதைப் போல நடிக்கிறார்.

இந்திய சமுதாயத்தின் பாரம்பரிய வர்த்தக அமைப்புகளான மலேசிய இந்திய உணவக சங்கங்கள், ஜவுளி சங்கம் மளிகை கடை உரிமையாளர் சங்கம், முடி திருத்துவோர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கின்ற நிலையில் வெளிநாட்டு தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ள அனுமதி கேட்ட பொழுது மனித வள அமைச்சகம், உள்துறை இவற்றை எல்லாம் முந்திக்கொண்டு முதலில் மறுப்பு தெரிவித்தவர் இவர்தான்.

அப்பொழுது இவர் பொருளாதார துறை அமைச்சராக இருந்தார்.

கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்பில் இருந்தபொழுது இந்திய சமுதாயத்தை பற்றி எண்ணிப் பாராதவர் இப்பொழுது புது இயக்கம் கண்ட பின்பு மித்ரா போன்ற கட்டமைப்பு தேவையில்லை என்கிறார்.

மித்ராவினால் இந்திய சமூகம் மறுமலர்ச்சி அடைந்திருக்கிறதா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் இவர் அதற்கு பதிலாக, தேவை அடிப்படையில் எல்லாருக்கும் எல்லா-மும் என்ற அடிப்படையில் இன்னொரு கருத்தை சொல்லியிருப்பது ஒரு தந்திரமான வேலை என்பதை விவேகானந்தன் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை