
காஜாங்கைச் சேர்ந்த திவ்யாசினி முருகன், 2025 ஆம் ஆண்டு மலேசிய உயர்கல்விச் சான்றிதழ் (STPM) தேர்வில் 4.00 PNGK பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்.
திவ்யாசினி தனது ஆரம்பக் கல்வியை காஜாங் தமிழ் பள்ளியில் பயின்றார். பின்னர் SMK Jalan Bukit பள்ளியில் இடைநிலைக் கல்வியையும், SMK Tinggi Kajang பள்ளியில் ஆறாம் படிவக் கல்வியான எஸ்.டி.பி.எம். படிப்பையும் தொடர்ந்தார்.
பொது பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று
ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருப்பதாக திவ்யாசினி தெரிவித்தார்.

இவரின் தந்தை முருகன் செல்லத்துரை தொழில்நுட்ப நிபுணராக (Technician) பணியாற்றி வருகிறார். தாயார் உமா சுப்ரமணியம் இல்லத்தரசியாக உள்ளார். திவ்யாசினிக்கு மூன்று தங்கையர் உள்ளனர்;
இந்த வெற்றிக்காக பாடுபட்ட தன் பெற்றோர்,
ஒத்துழைத்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திவ்யாசினி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
தளராத உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்பதற்கு திவ்யாசினியின் இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


