Sunday, June 21, 2026

ராவாங் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தில் ‘SSDI டிரினிட்டி’ பட்டமளிப்பு விழா

மலேசிய ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தில், 2026-ஆம் ஆண்டிற்குரிய SSDI டிரினிட்டி பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இதன்மூலம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியது என்று இந்த மையத்தை சீரும் சிறப்புமாக வழிநடத்துகின்ற முனைவர் அ.குமரன் தெரிவித்தார்

இந்த விழாவில், 170-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மேடையில் படைத்த கல்வி, கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் அமேசிங் மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் பெற்றன.

SSDI டிரினிட்டி பட்டமளிப்பு விழா 2026-ஐ வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை சாரதா இல்லம் எட்டியது. இந்த இந்த நிகழ்ச்சியை ஒரே இல்லத்தில் கூடி வாழ்கின்ற ரூட்டில் கணக்கான மாணவர்களின் ஒற்றுமை, சாதனை அங்கீகாரம் மற்றும் நலவாழ்வு கைம்மாறு கருதாத சேவை ஆகியவற்றை ஒன்றிணைத்தது.

இந்நிகழ்ச்சியில், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் அதிகாரப்பூர்வ விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருடன், சிலாங்கூர் இளைஞர் சமூகத்தின் (SAY) தலைமை நிருவாக அதிகாரி ஐமன் நஸ்ரி, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக பொன். வேதமூர்த்தி, கோம்பாக் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரி ஷஃப்ருல் பின் ஹாஜி காதிர்; டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

குழந்தைகள் நலன், கல்வி, கலாச்சார மேம்பாடு மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் தொடர்ச்சியான மேம்பாடு காண்பதில் முக்கியப் பங்காற்றிய ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தின் தலைவர் டாக்டர் குமாரன் அடைக்கலம் இந்த விழாவை வழிநடத்தினார்

.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை