
போர்ட்டிக்சன் வட்டாரம் பாசிர் பாஞ்சாங்கில் புதிதாக கட்டப்பட்ட ‘ஸ்ரீ ஏசான்’ திருமண மண்டபம் பிரமாண்டமான முறையில் இன்று திறப்பு விழா கண்டது.
இந்த நிகழ்விற்கு டத்தோ அமிட்டும் அவரின் துணைவியாரும் கலந்து கொண்டு தலைமை தாங்கியதுடன் திருமண மண்டபத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.
எசான் குழுமத்தின் புதிய முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திருமண மண்டபம், ஒரே நேரத்தில் ஏறக்குறைய 1,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபம், ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை ஒத்த தோற்றத்தையும் தரத்தையும் கொண்டுள்ளதாக டத்தோ அமிட் கூறினார்.
மண்டப முன்பதிவுகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகை-களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்பவர்களுக்கு வெ.7,888 முதல் தள்ளுபடி விலையில் திருமண தொகுப்புகள் வழங்கப்படுவதுடன், உணவுகளுக்காக மூன்று வகையான பேக்கேஜ்களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

மேலும், இந்த மண்டபத்தில் திருமணம் செய்து கொள்ளும் புதுமணத் தம்பதிகளுக்கு எசான் தங்கும் விடுதியில் ஒரு நாள் கட்டணமின்றி தங்கும் வசதியும் இரவு உணவும் வழங்கப்பட வுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
முன்பதிவு செய்ய விரும்புவோர் வெ.500 முன்பணம் செலுத்தி தங்களுக்கான நாளை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய டத்தோ அமிட், “1,000 பேருக்கான உணவு மற்றும் மண்டப வசதி-யுடன் கூடிய திருமண ஏற்பாடுகள் வெறும் 25,000வெள்ளி மட்டுமே.
“இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த புதிய திருமண மண்டபம் போர்ட்டிக்சன் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு சிறந்த திருமண நிகழ்வு மையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





