Sunday, June 21, 2026

4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபரில் தேர்வு: -தொடக்கப்பள்ளிமாணவர்களும் பெற்றோரும் தடுமாற்றம்!

நிகழும் 2026 கல்வி ஆண்டில் 4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் அக்டோபர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் அழுத்தத்திற்கும் தடுமாற்றத்-திற்கும் ஆளாகியுள்ளதாக முருகன் கல்வி நிலைய இயக்குனர் சுரேன் கந்தா தெரிவித்துள்ளார் .

தொடக்கக் கல்வி மதிப்பீட்டு தேர்வான யூபிஎஸ்ஆர், அண்மைய சில ஆண்டுகளாக நடைபெறாத சூழ்நிலையில், தற்பொழுது இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு செய்துள்ளது.

ஒன்றாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான பாடங்களை உள்ளடக்கிய தேர்வாக இது அமைந்திருக்கும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், இன்னும் மூன்று மாதங்களில் மாணவர்கள் எப்படி இதுபோன்ற தேர்வுக்கு தயார் ஆவார்கள் என்று வினா எழுப்பியுள்ள சூரேன் கந்தா இது மாணவர்களுக்கு அழுத்தத்தையும் சோர்வை-யும் ஏற்படுத்தக் கூடியது என்று கவலை தெரிவித்தார்.

இப்படிப்பட்ட தேர்வை அறிமுகப்படுத்த அரசாங்கம், குறிப்பாக கல்வி அமைச்சு விரும்பினால், அதற்கு உரிய அவகாசம் அளித்து, அதன் பின்பு நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஆண்டு தொடக்கத்திலாவது இதுகுறித்து அறிவிப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

கல்வியில் சிறந்த மாணவர்கள் ஏறக்குறைய இதற்கு தயார் ஆவார்கள். ஆனால் பின்தங்கிய மாணவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்வ-தில் தடுமாற்றத்தை எதிர்கொள்ள நேரிடும்.

தவிர ஆசிரியர்களுக்கும் இது எதிர்பாராத பணிச்சுமையை ஏற்படுத்தும்; எல்லாவற்றுக்-கும் மேலாக பெற்றோர்கள் பெரும் அவதிக்கு ஆளாவார்கள்.

ஒன்றாம் ஆண்டு முதல் பாட நூல்களை சேகரிக்க வேண்டும்; குறுகிய கால அவகாசமே இருப்பதால் மாணவர்களை டியூஷன் வகுப்பு-களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தேர்வு அட்ட-வணையை அறிவித்துள்ள கல்வி அமைச்சு, எந்த முறையில் தேர்வு அமையும் என்பதைப் பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இத்தகைய சூழல், தொடக்கக்கல்வி மாணவர்களை இயல்பான கல்விச் சூழலில் இருந்து மன அழுத்தத்திற்கு தள்ளக்கூடிய நிலையை கல்வி அமைச்சு ஏற்படுத்தி இருப்பதாக சுரேன் கந்தாதன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

முன்னதாக எஸ்பிஎம் தேர்வு நன்னெறி பாடம் குறித்த கல்வி கருத்திருந்து மலாயா பல்கலைக்கழக கலை சமூக கல்வி புல வளாகத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதிலிருந்தும் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சுரேன் கந்தா மேற்கண்டவாறு செய்தியாளர்களிடம் பேசினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை