
மலேசிய இந்திய சமுதாயத்திற்கு கல்வி உருமாற்ற மையமாக உருவாகியுள்ள முருகன் கல்வி நிலையத்தை-ஸ்ரீ முருகன் செண்டர் தோற்றுவித்த கல்வி வள்ளல் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் தம்பி ராஜா கடந்த ஆண்டு ஜூன் 23-இல் மறைவெய்தியதை முன்னிட்டு நேற்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ முருகன் செண்டர் தலைமையகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தம்பி ராஜாவின் உறவினர் நட்பினர், சுரேன் கந்தா, புகனேசுவரி, ஸ்ரீ கணேஷ், இந்து உள்ளிட்ட முருகன் கல்வி நிலைய பொறுப்பாளர்கள் சமூக ஆர்வளர்கள், ஊடகத்தினர் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.
வழிபாட்டிற்கு பிறகு, தம்பி ராஜாவின் அன்பு நட்பினர், தம்பி ராஜாவின் பிள்ளைகள் உள்ளிட்டோர் முருகன் கல்வி நிலையத்தையும் அதன் நிறுவனரையும் நினைவு கூர்ந்து உரையாற்றினர். தொடர்ந்து பகல் உணவுடன் இந்த நிகழ்ச்சி நிறைவெய்தியது.

இதன் தொடர்பில் ஊடகத்தாரை சந்தித்த முருகன் கல்வி நிலைய இயக்குனர் சுரேன் கந்தா,
“கல்வி வள்ளல் டான்ஸ்ரீ தம்பிராஜா மறைந்த இந்த ஓராண்டு காலத்தில் அவர் உருவாக்கிய இந்த கல்வி நிலையம் அகலக்கால் வைத்து பல்கி பெருகியுள்ளது. ஜோகூர் முதல் பினாங்கு வரை முருகன் நிலைய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன”.
“சமூக ஆர்வலர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன் முருகன் கல்வி நிலையம் தற்போது எழுச்சியோடு செயல்படுகிறது. முருகன் கல்வி நிலையத்தில் இணைந்து காலம் கருதாமல் கடப்பாட்டு உணர்வுடன் கொண்டாற்றுகின்ற அத்துணை பேரையும் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்” என்றார்.

2025 எஸ் பி எம் தேர்வில் ‘5-ஏ’க்களுக்கு மேல் தேர்ச்சி பெற்ற பி-40 தரப்பு குடும்பங்களை சேர்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் எஸ் எம் சி மாணவர்களா அல்லரா என்ற வேறுபாடு இன்றி நலிந்த குடும்ப மாணவர்களின் கல்விப் பயணம் தடைப்படக்கூடாது என்பதன் அடிப்படையில் ஆறாம் படிவம், மெட்ரிகுலேஷன் பட்டயக் கல்வி(டிப்ளோமோ) படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இன்று கல்வி நிதியுதவி அளிக்கப்பட்டது.
இந்த கல்வி நிதி அளிக்கும் நிகழ்வு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வரை வழங்கப்பட இருப்பதாக சுரேன் கந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இரு முக்கிய குறிக்கோள்களான இந்திய சமுதாய மாணவர்களின் கல்வி மறுமலர்ச்சி இந்திய சமுதாய ஒற்றுமை ஆகிய இரண்டையும் இலக்காகக் கொண்டு முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து பயணிக்கும்.
இதன் தொடர்பில் உதவுகின்ற ஊடக நண்பர்களை இந்த வேலையில் நன்றியுடன் நினைவு கூர்வதாக சுரேன் கந்தா மேலும் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டில் முருகன் கல்வி நிலையம் அபார வளர்ச்சி கண்டு வருவதற்கு கல்வி வள்ளல் தம்பி ராஜாவின் ஆசைதான் காரணம் என்று சுரேன் கந்தா கூறினார்.
ஸ்ரீ கணேஷ் வழி னநடத்திய இன்றைய நிகழ்ச்சியில், ‘தந்தை மனம்’கல்வி உதவி நிதியை ஹரிஷ் சங்கர் 2,000 வெள்ளி, திவாஷினி முருகன் 3000 வெள்ளி, சிவராஜ் புஷ்பராஜ் 2000 வெள்ளி சர்வேஷ்வர் சரவணன் 2000 வெள்ளி தீபிகா செல்வநாயகம் 2000 வெள்ளி பவளஹரிசி கேசவன் 2000 வெள்ளி தனுசுயா மகேந்திரன் 3000 வெள்ளி என ஏழு பேர் கல்வி உதவி நிதி பெற்றனர்.


