
சமூக வலைத்தளங்களில் மஇகாவைப் பற்றி அவதூறு பரப்புவோரை மஇகா இனியும் சகித்துக் கொள்ளாது; அத்தகைய தரப்பினர் மீது இதுவரை எட்டு பேர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ த. முருகையா இன்று ஊடகத்தாரிடம் தெரிவித்தார்.
மஇகா-விற்கு இந்திய சமுதாயத்தில் மீண்டும் ஆதரவு அலை பெருகி வருகின்ற தற்போதைய சூழலில், மஇகாமீது காழ்ப்பும் வெறுப்பும் கொண்ட சில தரப்பினர் சமூக வலைதளங்-களில் பரப்பிவரும் அவதூற்றுத் தகவலை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, ஜொகூரில் உள்ள மஇகா கட்டடம் விற்கப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்க-ளில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது;
“மஇகாவைப் பற்றிய தவறான தகவலையும் அவதூற்றையும் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்கெனவே கூட்டுப் பிரார்த்தனை, விளையாட்டு போட்டி, குடும்ப தின விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்கெனவே நடைபெற்று விட்டதாக அவர் தெரிவித்தார்.
” அடுத்ததாக, சுகாதார அமைச்சின் ஒத்துழைப்-புடன் வரும் ஜூன் 28ஆம் தேதி காலை முதல் மாலை வரை 152 தொகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன” .

இந்த மருத்துவ முகாம்களில் அனைத்து இன மக்களும் பங்கேற்று பயனடையலாம் என்றும், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், ஜூலை 4ஆம் தேதி நடத்த திட்டமிடப் பட்டிருந்த பேச்சுப் போட்டி, இரு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் காரண-மாக ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்-திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மஇகா தொகுதிகளிலும் நெடுஓட்ட நிகழ்ச்சி நடத்தப் படவுள்ளதாகவும், அதற்கு எஸ்.எம். முத்து தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.
வரவிருக்கும் ஜொகூர் மாநில இடைத் தேர்தலை முன்னிட்டு, 56 தொகுதிகளில் மஇகா பிரதிநிதிகள் களமிறங்கி தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணியின் முக்கியமான கோட்டையாகும். இம்முறையும் இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். தேசிய முன்னணி 50 இடங்களை வெல்லும் இலக்கு-டன் களமிறங்கியுள்ளது,” என்றும் டத்தோ முருகையா கூறினார்.


