
16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை மலேசிய சோசலிசக் கட்சி- PSM செயல்பாட்டு அறையில் ஜொகூர் வேட்பாளரை அறிவித்தது.
அமீர் ஷாஃபிக் அமீர் சோக்ரே (40 வயது) எனும் இளைஞரை இம்முறை PSM களம் இறக்கி யிருக்கிறது. அத்தகவலை இன்று PSM-மின் தேசிய துணைத் தலைவர் தோழர் அருள் செல்வன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வேட்பாளர் அமீரை அறிமுகப்படுத்தினார்.
அமீர் ஷாஃபிக் மலேசிய சோசலிசக் கட்சியின் ஜொகூர் கிளையின் மாநிலச் செயலாளராக-வும், அக்கட்சியின் தொழிலாளர் பிரிவின் தொழிலாளர் உரிமை ஆர்வலராகவும் செயற் படுகிறார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோகூர் மாநிலத்தில் வசிக்கும் அவர் மக்கள் தொடர்பான பல போராட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு கோத்தா இஸ்கண்டார் தேர்தலில் போட்டியிட்ட மலேசிய சோசலிசக் கட்சி, இம்முறை ஜொகூர் ஸ்கூடாயில் வேட்பாளரை களம் இறக்கி இருக்கிறது.


