
சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் மலேசிய திராவிடர் கழக தலைவராக பொறுப்பாற்றிய பெருந்தகை அண்ணாமலை அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. பழகுவதற்கு இனிமையான நண்பர் தந்தை பெரியார் கொள்கையில் ஆழ்ந்த உறுதி பூண்டவர். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது அளவற்ற அன்பு பாராட்டக்கூடியவர். எளிமையாக எல்லோரிடத்திலும் பழகக் கூடியவர். தந்தை பெரியார் கொள்கை மை பினாங்கு மாநிலத்திலும் மலேசிய மண்ணிலும் விதைத்திடும் பணியிலும் விளைத்திடும் பணியிலும் சிறப்பாக செயலாற்றிய பெருமைக்கு உரியவர். இன்னும் பல காலம் அவர் வாழ்ந்திருந்தால் இயக்கம் சிறந்தோங்கும். காலத்தின் கோலம் நோய் தாக்குதல் காரணமாக நம்மை விட்டு பிரிந்து உள்ளார். மலேசிய மண்ணில் பெரியார் கொள்கை பரப்பும் ராணுவ பணியில் கமாண்டராக செயலாற்றிய அவரின் மறைவு திராவிடர் கழகத்திற்கு பேரிழப்பு. குறிப்பாக மலேசிய திராவிடர் கழகத்திற்கு பெரும் இழப்பு.
வீரவணக்கம் வீரவணக்கம் அவரின் நினைவை போற்றக்கூடிய வகையில் பெரியார் இயற்றிய அறிவுச் சுடரை அணியாமல் ஏந்திச் செல்வதுதான் நாம் செய்யக்கூடிய கைமாறு. சென்று வா தோழரே… என்றும் எங்கள் நினைவில் நீங்கள்….!
அய்யாவை இழந்து மீளா துயரில் ஆழ்ந்திருக்கும் அம்மாவுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆறுதல் பெற கோருகிறோம். அவரோடு பழகிய பேசிய நாட்கள் பயணித்த நாட்கள் மலேசியாவில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்ட நாட்கள் மறக்க முடியாதவை….
தோழமையுடன்,
துரை சந்திரசேகரன்
21-01-2025
(மலேசிய திராவிடர் கழகத் தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை மறைவையொட்டி தமிழக திராவிடர் கழக பொதுச் செயலாளர் மானமிகு துரை சந்திரசேகரன் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி)


