Friday, July 31, 2026

மலேசிய சைவ நற்பணிக்கழகச் சொற்பொழிவு!

திங்கள்தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தமிழ்ச் சைவ சமயச் சொற்பொழிவு இம்முறை எதிர்வரும் 5.7.2026 ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூர், விசுமா துன் சம்பந்தன், டான்சிறி சோமா அரங்கில், காலை மணி 9.30 அளவில் நடைபெறவுள்ளதாக கழகத்தின் தலைவர் ‘சிவநெறி செம்மல்’ ந.தருமலிங்கம் தெரிவித்துள்ளார்.

மணிவாசகர் குருபூசனையாக நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் செயலாளர் நிறைமலி அகல்யா தர்மலிங்கம், திருவாசகத்தில் பெருமானின் திருப்பெயர்கள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

கழகத்தின் தலைவர் திருமுறைச் செம்மல் முனைவர் தர்மலிங்கம் நடராசன், ‘பிடித்த பத்து’ என்னும் தலைப்பில் உரையாற்றுவார்.

அரிய சமய உண்மைகளையும் வாழ்வியல் கூறுகளையும் அறிவதற்கும் அதனைப் பின்பற்றுவதற்கும் இந்நிகழ்ச்சி வாய்ப்பாய் அமையும் என்பதில் ஐயமில்லை!

சிந்தனைக்கும் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையோடு தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயன் அடைய அழைக்கப்படுகிறார்கள்.

கட்டணமின்றி நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். கூடுதல் தெரிவலலுக்கு 012-3277061 அல்லது 0122340470 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்புக்கு darmamsnk@yahoo.com.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை