Wednesday, July 15, 2026

தேசியத் திருக்குறள் விழா! -மலேசியத் தமிழர் சங்கம் ஏற்பாடு!!

தேசிய அளவில் திருக்குறள் விழாவிற்க்கு ஏற்பாடு செய்திருப்பதாக மலேசியத் தமிழர் சங்கத் தலைவர் பரமசிவம் மருதை அறிவித்துள்ளார்.

உலக இலக்கிய மேடையில் தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்திக் கொடுத்த பழந்தமிழ் இலக்கியம் திருக்குறள்; ஒன்றுபட்ட ரஷ்யாவின் அரசியல்- இலக்கிய-தத்துவ மேதை வில்லியம் டால்ஸ்டாய்- அண்ணல் காந்தியடிகள்- இந்தியாவின் விடுதலைக் கவி பாரதியார் ஆகிய மூவரையும் ஒன்றிணைத்த இலக்கியக் கயிறு திருக்குறள்; உலகில் அறுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே இலக்கிய நூல் திருக்குறள்;

இத்தகைய பெருமைகளை தன்னகத்தேக் கொண்டுள்ள திருக்குறளின் பெருமையை மலேசியத் திருநாட்டில் பாரிய அளவில் பரைசாற்றும் வகைவில் தேசியத் திருக்குறள் விழாவிற்கு ஏற்பாடு செய்திருப்பதாக பரமசிவம் மருதை இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

2026 செப்டம்பர் திங்களில் பேராக் மாநிலத்தில் இந்த விழா நடைபெற இருப்பதாகவும் மண்டபத்தை உறுதி செய்தபின் காலத்தையும் மற்ற விவரங்களையும் விரைவில் ஊடக வழி மலையகத் தமிழ்ச் சமூகத்துக்கு அறிவிக்க இருப்பதாகவும் பரமசிவம் மருதை மேலும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை