Wednesday, July 29, 2026

‘மாசா’ பல்கலைக் கழகத்தில் இன்றும் நாளையும் திருமண கண்காட்சி

‘கல்யாணம்- கச்சேரி- கொண்டாட்டம்’ என்னும் முழக்கத்துடன் திருமண கண்காட்சி 3.0-ஐ டத்தோ சிவகுமார் மாசா-MAHSA பல்கலைக்கழக Ballroom மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.

மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இத்தகைய ஓரிட திருமண சேவை கண்காட்சி கடந்த இருமுறை ஏற்பாடு செய்த அனுபவத்தின் அடிப்படையில் இம்முறை மிகவும் சிறப்பான முறையில் உணவு பரிமாறுதல்-கேட்டரிங்; மண்டப அலங்காரம்; திருமண பட்டுச் சேலை; மணமக்கள் அலங்காரம்; காணொளி- புகைப்பட சேவை; வெண்கல பொருட்கள்; திருமண நாள்- நேரம் ஆகிவற்றை உறுதி செய்வதற்கான அர்ச்சக சேவை, அணிச்சல் தயாரிப்பு உள்ளிட்ட ஓரிடச் சேவை மையமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருமண கண்காட்சி இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு நடைபெறுகிறது.

காலை 11:00 மணி முதல் இரவு 10:00மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது என்று இந்த நிகழ்ச்சி குறித்த ஊடக சந்திப்பில் டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.

திருமண ஏற்பாடு தொடர்பாக ஒவ்வோர் இடமாக சம்பந்தப்பட்ட மணமகன்- மணமகள் வீட்டார் தேடும்பொழுது கால விரயமும் சலிப்பும்கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய அவசர உலகில் இவற்றை யெல்லாம் தவிர்த்து ஒரே இடத்தில் எல்லா சேவைகளையும் பேசி உறுதி செய்யும் வகையிலும் திருமண வீட்டாருக்கு உதவும் வகையிலும் நடத்தப்படுகின்ற இந்த நிகழ்ச்சியில் நிகழும் 2026- ஆண்டிலும் அடுத்த 2027ஆம் ஆண்டிலும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் இந்த கண்காட்சியில் வந்து கலந்து மேல் தகவலை பெறலாம் என்று தெரிவித்த சிவகுமார்..,

இன்றும் நாளையும் இதே மண்டபத்தில் நடைபெறும் திருமண கண்காட்சியில் கலந்து கொண்டு தங்கள்வீட்டு திருமண நாளை முன்பணம் செலுத்தி உறுதி செய்வோருக்கு எல்லா சேவைகளிலும் கட்டணக் கழிவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்றைய நாட்களில் திருமணம் என்பது மிகவும் ஒரு கடினமான காரியம்; அதனால் தான் ‘திருமணம் பண்ணிப்பார்’ என்பது நம் சமூகத்தில் நிலவும் அனுபவ வழக்கு.

இன்றைய அவசர- பரபரப்பான உலகில் திருமண ஏற்பாடு செய்வோருக்கு மிகவும் எளிதான சேவையை வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும் இந்தக் கனவு திருமண கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் வந்து கலந்து பயனடையும்படி சிவகுமார் கேட்டுக்கொள்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை