Wednesday, July 29, 2026

80ஆம் ஆண்டு நிறைவு விழா உச்சம்: -137 மஇகா தொகுதிகளில் தொடர்ஓட்டம்!

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 137 மஇகா தொகுதிகளில் ஒரே நேரத்தில் மாபெரும் தொடர் ஓட்டப்போட்டி நடத்தப்பட வுள்ளதாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ த. முருகையா தெரிவித்தார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மொத்தம் ஏழு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அவற்றில் கூட்டு பிரார்த்தனை, குடும்ப விழா, விளையாட்டுப் போட்டி, இரத்த தானம் உள்ளிட்ட மருத்துவ முகாம் ஆகிய நான்கு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

அடுத்த நிகழ்வாக, வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 26ஆம் தேதி காலை 7:00 மணி அளவில் நாடு முழுவதும் உள்ள 137 மஇகா தொகுதிகளிலும் ஓட்டப்பந்தயம் ஒரே நேரத்தில் நடைபெறும். ஒவ்வொரு தொகுதி-யிலும் சுமார் 1,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தேசிய அளவிலான தொடக்க நிகழ்ச்சி கோலாலம்பூர் தாமான் தித்திவங்சாவில் நடைபெறவுள்ளது.

இதில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்து தொடக்கி வைப்பார்.

மக்களிடையே உடல்நல விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தொடர் ஓட்ட போட்டி நடத்தப்படுவதாக டத்தோ முருகையா தெரிவித்தார்.

குறிப்பாக இன்றைய இளம் தலைமுறை-யினர் உடற்பயிற்சியில் போதிய ஈடுபாடு காட்டுவதில்லை என்பதால், அவர்களை உடற்பயிற்சியில் ஈடுபடுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி அமையும் என்றார்.

இந்த தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்-தின் ஒருங்கிணைப்பாளராக டத்தோ எஸ்.எம். முத்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை