Wednesday, September 16, 2026

எழுச்சித் தமிழனின் வீழ்ச்சிப் பயணம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று 65 வயதை எட்டுகிறார்!
முதற்கண், குமரி வான்முற்றத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்து உரித்தாகட்டும்!

வாழ்க தொல். திருமாவளவன்! வளர்க விசிக!!

ஏறக்குறைய இரண்டாவது வைகோவைப் போல உருமாறிவிட்டார் தொல் திருமாவளவன்!

மாற்றிமாற்றி பேசுவது; கவியரசர் கண்ணதாசன் வைகோவைப் போல காலையில் ஒன்று பேசுவது, மாலையில் ஒன்று மழுப்புவது; உள்ளொன்றும் புறமொன்றுமாக கருத்தாடுதல்; பதவி மோகம்; சொகூசு நாற்காலியை பெற்றுக் கொள்ளுதல் அரசியல் வஞ்சகம்- இரண்ட-கம்; அரசியல் பயணத்தில் தோளில் கை போட்டுக்கொண்டே விலா எலும்பில் குத்த நினைப்பது என்றெல்லாம் மாறிவிட்ட தொல். திருமாவளவனை, அவரின் முகமே பளிச்சென படம் காட்டுகிறது.

சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே காட்டு மன்னார் கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்த தொல் திருமாவளவனை, அனைவரும் வியப்புடன் நோக்கிய பொழுது, அண்மைய தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் தொடர்பில் வைட்பு மனுத் தாக்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் அனாயாசமாக சொன்ன பதில் அதிர்ச்சி அளித்தது; “தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியல் களம் மாறுகிறது” என்று மிக சாதாரணமாக சொன்னார் தொல் திருமாவளவன்.

தேர்தலுக்குப் பிறகு மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக தொடரப் போவதில்லை என்ற குயுக்திப் பார்வை ராகுல் காந்தியைப் போல தொல். திருமாவளவனுக்கும் தெரிந்திருக்-கிறது. இது, எப்படி சாத்தியமாயிற்று?

2016 சட்டமன்றத் தேர்தலின் பொழுதே தமிழ்நாட்டு முதலமைச்சராக முக ஸ்டாலின் ஆகி இருக்க வேண்டியதை, வைகோவுடன் கைகோத்து தடுத்தவர் இதே தொல் திருமா-வளவன்தான்.

அந்தத் தேர்தலில் அரசியல் முகவரி அற்றுப் போன திருமாவளவனுக்கு ஒரு மாநிலக் கட்சி என்ற தகுதியை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் தொடர்ந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்றெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்து அரசியல் வலிமை-யையும் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை யும் ஏற்படுத்திக் கொடுத்த திமுகவிற்கும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் தொல் திருமாவளவன் பச்சை துரோகம் இழைத்து விட்டார்.

அவர் இப்பொழுதுகூட வேறு வழி இன்றி-தான் வன்னி அரசை அமைச்சர் அவையில் இடம்பெற வைத்துள்ளார்.

மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை என்றால் அதில் அமைச்சராக சேர்ந்து கொள்ள இவர் சம்மதித்திருப்பார்.

இப்பொழுது விஜய் ஜோசப் தலைமையி-லான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சில்லறைகளின் வரிசையில் இடம்பெற மனமின்றித்தான், வன்னி அரசை அனுப்பி விட்டு வெளியில் இலவு காத்த கிளியைப் போல இருக்கிறார்.

பட்டியல் இன சமுதாயத்தில் யார் எத்தகைய பதவியைப் பெற்று உயர்நிலையை அடைந்-தாலும் அது அந்த சமுதாயத்திற்கான மேன்மையாகவோ சிறப்பாகவும் கருதப் படாது; தொல் திருமாவளவன் உயர் பதவியை அடைந்தால்தான் தலித் மக்கள் மேன்மை அடைந்ததாக கருதப்படும் என்று தலித் மக்களையும் விசிக-வினரையும் இவர் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் தொழில் அடிப்படையில் அல்லது வஞ்சகத்தின் அடிப்படையில் ஆர்ம்ஸ்டராங் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தொல் திருமாவளவன் தலித் அரசியலை கையில் எடுத்தார் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக அவர் படுகொலை செய்யப்பட்டார் என்றெல்லாம் பேசினார்.

இப்பொழுது அதே தலித் சமூகத்தை சேர்ந்த பொறியியல் மாணவன் கோவை இந்துஸ்தான் கல்லூரியை சேர்ந்த அந்த மாணவர் அடித்தே கொலை செய்யப்பட்டு இருக்கிறார் அதைப்பற்றி இவர் வாயே திறந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை வாயைத் திறந்தாலும் வலுவான மறுப்பையோ அந்த மாணவனின் இறப்புக்கான நியாயத்திற்கோ உரிமைக் குரலை முன்வைத்ததாகத் தெரியவில்லை.

இதே திமுக ஆட்சியாக இருந்திருந்தால் தொல் திருமாவளவன் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து இருப்பார்.

ஜெயலலிதா, விஜய் போன்றோரை அடைக்கலம் நாடுகிறவர்களின் நிலை இதுதான்; மௌனியாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் விரட்டி அடிப்பார்கள்.

தொல் திருமாவளவன், இடைப்பாடி பழனி சாமி, வைகோ, கிருஷ்ணசாமி போன்றோ-ரின் ஜம்பம் எல்லாம் ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் திராவிட எல்லையில் தான் பலிக்கும்; மாறாக ஜெயலலிதா ஜோசப் விஜய் போன்றோரிடம் கைகட்டி வாய் பொத்தி மௌனம் காக்கத்தான் வேண்டியிருக்கும்.

திருமாவளவனின் தற்போதைய அரசியல் பாதை தவறானது என்று தெரிந்தும் திமுக மீது கொண்ட வஞ்சம், பதவி ஆசை என்ற இரண்டையும் தன் உள்ளத்தில் கொலு கொள்ள செய்து இருப்பதால் இப்படி பாதைமாறி பயணிக்கிறார் தொல் திருமாவளவன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணம் செய்த பொழுதெல்லாம் அவருடைய முகத்தில் ஒரு கம்பீரம் தெரியும்; சொல்லிலும் கருத்திலும் வெளிப்படை தன்மை பளிச்சன இருக்கும்.

அப்படிப்பட்ட திருமாவளவனை இனி எப்போது தமிழ்நாடு காணும்?

காலம் பதில் சொல்லட்டும்!

இன்று (ஆகஸ்ட் 17, 2026) தொல். திருமா வளவன் தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி(VCK) இதனை ‘தமிழர் எழுச்சி நாள்’ எனக் கொண்டாடி, கள்ளக் குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பெரிய அளவிலான தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை நடத்துகிறது.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் பிறந்த தொல் திருமாவளவன், சென்னை பிரசி-டென்சி கல்லூரியில் இரசாயனவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
தொடர்ந்து குற்றவியல் பிரிவில் (Criminology) முதுநிலை கல்வியும் பெற்றவர்.

தன்னுடைய அரசியல் பயணத்தில் தொடக்கத்தில் திமுகவில் இணைந்து பயணித்த தொல் திருமாவளவன், பின்னர் தலித் இயக்கங்களில் ஈடுபாடு கொண்டார்.

1990ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) நிறுவினார். 2001ல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்ற இவர், 2009, 2019, 2024ல் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

அம்பேத்கர் சிந்தனை, திராவிட இயக்க சார்பு, சாதி ஒழிப்பு, தலித் உரிமை, தமிழ் தேசியம், சனாதன எதிர்ப்பு, மற்றும் இந்து தேசிய வாத எதிர்ப்பு என்றெல்லாம் பயணித்த திருமாவளவன் இப்பொழுது திமுக எதிர்ப்பு, பதவி ஆசை என்னும் இரட்டைப் புள்ளியில் மையம் கொண்டுள்ளார்

இன்றைய உளுந்தூர்பேட்டை மாநாட்டில், கட்சித் தொண்டர்கள், தமிழ் ஆர்வலர்கள் உன ஏறக்குறைய ஐந்து லட்சம் பேர் பங்கு கொண்டுள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விஜய்யை பாஜகவின் கள்ள குழந்தை என்று எந்த திருமாவளவன் விமர்சித்தாரோ அதே திருமாவளவனின் பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘திராவிடமும் தமிழ்த் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள்’ எனக் கூறி, திருமாவளவனுக்கு விஜய் போலி வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம், தன்னை ‘தமிழ்நாட்டின் மோடி’என்று விஜய் நிரூபித்திருக்கிறார்.

தொடர்ந்து தமிழ் மொழிக்கு மூன்றாவது இடத்தை அளித்து வருகின்ற விஜய், திராவிடம் பற்றியும் தமிழ்த் தேசியம் பற்றியும் பேசுவது வினோதத்திலும் வினோதம்; விந்தையிலும் விந்தை!

திருமாவளவனின் பிறந்தநாளை விசிக, ஆண்டுதோறும் தமிழர் அடையாளம், மொழி, உரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகக் கொண்டாடுகிறது.

இவற்றுடன், பதவி மோகம், திமுகமீதான வஞ்சகம் இரண்டையும் இணைத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்; வெளிப்படைத் தன்மையாகவும் இருக்கும்.

வரலாறு நெடுக காலம் என்னும் நல்லாசிரியர் அவரவருக்குரிய பாடத்தை கற்பித்தேதான் வருகிறார். வீசிக்காவுக்கும் அதன் தலைமைக்கும் கிட்டப் போகும் பாடம் என்ன? எப்போது??

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை