Monday, April 20, 2026

2025 தைப்பூசத் திரு விழா: சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தலைமையில் பதினோராவது ஆண்டாக பணிப்படை

பெட்டாலிங் ஜெயா, ஜன 27-
மலையகத்தில் திருமுருக திருக் கடவுளுக்கு கொண்டாப்படும் தைப்பூச விழா, பாரம்பரிய இந்து சமய விழாவாக விளங்குகிறது.

வரும் பிப்ரவரி 10, 11 ஆம் நாட்களில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவின்போது, அனைவரும் தூய்மையை கடைப்பிடிப்போம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் தைப்பூச விழா பணிப்படைத் தலைவருமான டாக்டர் ஜி. குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

பத்துமலை தைப்பூசம், பினாங்கு தைப்பூசம், ஈப்போ தைப்பூசம் உட்பட நாடு தழுவிய அளவில் கொண்டாடப்படும் அனைத்து தைப்பூச விழாக்களிலும் நாம் அனைவரும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும்.

கூடாரங்கள் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் தரப்பினர் முறையாக குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும்.

பக்தர்களும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசாமல் குப்பை தொட்டிகளில் போடும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு 500 தொண்டூழியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள்.

பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு செலாயாங் நகராண்மைக் கழகம் பல இடங்களில் குப்பை தொட்டிகளை அமைப்பார்கள்.

மலேசிய இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம் உட்பட பல அமைப்புகள் இணைந்து தூய்மையான தைப்பூசத்தில் பங்கேற்பாளர்கள் என்றும் சந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ்’ இதன் தொடர்பில் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை