Monday, September 28, 2026

மடாணி கூட்டரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை: -டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதங்கம்!

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மத்திய மடாணி கூட்டரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று மலேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.ந்திரன் நேற்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கோலாலம்பூர் அம்னோ கட்டட வளாகத்தில் இன்று நடைபெற்ற மலேசிய மக்கள் சக்திக் கட்சியின் 18ஆவது பேராளர் மாநாட்டிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ தனேந்திரன் மேற்கண்டவாறு கூறினார்

அதைவிட, தேசிய முன்னணியை வழிநடத்தும் அம்னோவை, மோசமாக விமர்சிப்பதுடன் தரம் தாழ்ந்து கருத்து தெரிவித்து வரும் நம்பிக்கை கூட்டணி குறிப்பாக அதன் தலைமை பிகேஆர் கட்சியின் நடவடிக்கை ஏற்புடையதல்ல;
இருந்து தேசிய அதனால் பிக் யார் தலைமையிலான மடாணி அரசாங்கத்தில் இருந்து தேசிய முன்னணி உடனடியாக வெளியேற வேண்டும் என்று தேசிய முன்னணி தலைமைக்கு அவர் கோரிக்கை வைத்தார்.

கடந்த பொதுத் தேர்தலுக்குப்பின் எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லாததால், நாட்டு நலனில் அக்கரை கொண்ட அம்னோவும் அதன் தலைமை-யிலான தேசிய முன்னணியும் அரசியல் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு தந்தது.

ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் தேசிய முன்னணியின் ஆதரவு தவறான முடிவாக மாறி வருகிறது.

தேசிய முன்னணிக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பது இல்லை. குறிப்பாக, தேசிய முன்னணியில் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு வருகிறது.

ஆகையால், தேசிய முன்னணி மடானி அரசாங்கத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.
.
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் காலத்தில் பொருளாதார மேம்பாட்டு பெருந்திட்டம் (புளுபிரிண்ட்) வரையப்பட்டது.

2018-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்; ஆனால், கிடப்பில் போடப்பட்ட இந்த புளுபிரிண்ட் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

தவிர, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு வழங்கப்பட்ட வீட்டு சிறைவாசம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்விவகாரத்தில் அவருக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது என்று தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளில் ஒன்றான மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் வலியுறுத்தினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை