Monday, September 28, 2026

மக்கள் சக்தி கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி: -தேசிய முன்னணி தலைவர் உறுதி!

16-ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்திக் கட்சிக்கு, வெற்றி வாய்ப்புள்ள பாதுகாப்பான தொகுதி வழங்கப்படும் என்று தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.

மக்கள் சக்திக் கட்சியின் 18-ஆவது தேசிய பேராளர் மாநாடு, நேற்று அம்னோ கட்டட வளாகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 727 பேராளர்கள், தேசிய – மாநில பொறுப்பாளர்கள், ஆயிரக் கணக்கான கட்சி உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்தப் பேராளர் மாநாட்டை துணைப்பிரதமருமான ஜாஹிட் ஹமிடி. அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்து உரை நிகழ்த்தினார், கட்சி பேராளர்களும் உறுப்பினர்களும் உற்சாகக் கர்வொலி எழுப்பும் வகையில் அவர் பேசினார்.

இதன் உச்சமாக, வரும் பொதுத் தேர்தலில், மக்கள் சக்திக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள னாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை