
ஊழல் தடுப்பு ஆணையம்-MACC சட்டத்தின் பிரிவு 36, எவரிடமிருந்தும் தகவலைக் கோருவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கினாலும் அது, 12 வயது குழந்தையை — தேவையற்ற அமலாக்க நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கான உரிமம் ஆகாது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தாப்பா எம்பி டத்தோஸ்ரீ எம். சரவணன், அவரின் 12 வயது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்-களை, 36-ஆவது பிரிவின்கீழ் ‘நோட்டீசை’ப் பெறுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்திற்கு வருமாறு கோரிய நடவடிக்கை, உண்மையாக இருந்தால், அது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதுடன் அதிகார அத்துமீறலும் ஆகும் என்று சட்ட வல்லுநர் பொன் வேத மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு ‘நோட்டீஸை’ வழங்குவதற்காக ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வரும்படி கேட்பதற்கு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 36 ஆவது பிரிவு, ஆணையருக்கு அதிகாரம் அளிக்கவில்லை.
இந்தப் பிரச்சினையை, ஊழல் தடுப்பு ஆணையத்தின்விசாரணை அதிகாரங்க-ளுடன் இணைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது; பிரிவு 36 என்பது, ஒரு குறிப்பிட்ட சட்டப்பூர்வ அதிகாரமாகும்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தான் நோட்டீஸ் அனுப்ப விரும்பும் ஒருவரை, அதன் தலைமையகத்தில் நேரில் ஆஜராகும் படி அழைக்கலாம் என்று பிரிவு 36 கூறவில்லை.
ஒருவரிடம் இருந்து தகவலைக் கோருவதற்-கான நோட்டீசை வழங்குவதற்காக நேரில் ஆஜராகும்படி 12 வயதுக் குழந்தையைக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கை கவலையை அதிகரிக்கச் செய்கிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவருமான பொன். வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளி-யிட்டுள்ள இருக்கையில் குறிப்பிட்டுள்ளார்..
அவசியம் ஏற்படும் சூழலில் ஒரு சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாகவே சம்பந்தப்பட்ட நோட்டீசை சட்டப்பூர்வமாக வழங்கியிருக்கலாம்.
தகவல்களைக் கோருவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் என்பது, குடிமக்களை, குறிப்பாக 12 வயது சிறுவனை — தேவையற்ற அமலாக்க அதிகாரப் பிரயோகங்களுக்கு உட்படுத்துவதற்கான உரிமம் ஆகாது.
சரவணனின் கூற்று உண்மையாக இருந்து, அவரின் மகன் பிரிவு 36இன்படி நோட்டீசை பெறுவதற்காக மட்டுமே MACC தலைமை-யகத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தால், MACC தனது சட்டப்பூர்வ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.


