Monday, October 5, 2026

பாஸ் தீண்டத்தகாத கட்சியல்ல: -தான்ஸ்ரீ விக்னேசுவரன்

தேசிய முன்னணியுடன் பாஸ் மற்றும் வாவாசான் கட்சிகள் இணைந்து அரசியல் களம் காண்பது தேசிய அளவில் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மஇகா, பாஸ் கட்சியுடன் சேர்ந்து தேர்தல் களம் காண்பதில் எந்த பிரச்சினையும் இல்லையென்று அதன் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேசுவரன் நேற்று தெரிவித்தார்.

பாஸ் கட்சியின் அரசியல் நடவடிக்கையால், இந்து சமய வழிபாட்டிற்கோ அல்லது ஆலயங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. இந்திய சமுதாயத்திற்கு ஆதரவான நிலையை எடுத்துள்ள பாஸ் கட்சிக்கும் மஇகாவிற்கும் எந்தச் சிக்கலும் இல்லையென்று அவர் சொன்னார்.

கிள்ளான், கோல சிலாங்கூர், சிப்பாங் ஆகிய மூன்று மாவட்டங்களில் மூன்று தொகுதிகளில் மஇகா போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், அண்மைய நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் எதிர்கொண்டதைப் போன்ற கட்சி மட்டத்திலான சிக்கல் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது எழாமல் பார்த்துகொள்ளப்படும் என்று நேற்று மஇகா சிலாங்கூர் மாநில 80-ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அம்னோ பிரதிநிதி அழைக்கப்படாமல் கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது அரசியல் நிலைமை மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் தற்பொழுது தேசிய முன்னணி வலுவடைந்து வருகிறது என்றார்.

அம்னோவுடனான அரசியல் உறவு மேம்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தேசிய முன்னணியில் பயணிப்பதாகவும் சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்தவரை அடுத்த ஆட்சி, தேசிய முன்னணி தலைமையிலான ஆட்சி என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்த 18 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநில ஆட்சியில் எந்தப் பதவியும் வகிக்காத நிலையிலும் மக்கள் மஇகாவின் சேவையைத்தான் நாடுகின்றனர் என்றார். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமுதாயத்தைக் காக்கின்ற கட்சி மஇகாதான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்றார். அதனால்தான், எதற்கெடுத்தாலும் ‘மஇகா’, ‘மஇகா’ என்று பேசப்படுகிறது என்றார்.

எதிர்க்கட்சியினர்கூட, மஇகாவைத்தான் தாய்க்கட்சி என்கின்றனர் என்று பெருமையுடன் குறிப்பிட்டார் விக்னேசுவரன்.

தொழில், தொழில்நுட்பம் சார்ந்து 47 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியுள்ள மஇகா, இந்திய சமுதாய மாணவர்களுக்காக அதிக அளவில் கல்வி நிதியையும் கடனையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை