Monday, October 5, 2026

மலேசிய பொறியியலாளர் லீ மரணம்: இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் காரணமா?

(படங்கள் அனைத்தும் ஆவணத் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கோப்புப் படங்கள்)

மலேசிய பொறியியலாளர் லீ சீ பீன் 2006-இல் தற்கொலை செய்துகொண்ட வழக்கு அப்போது மூடி மறைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது அந்த வழக்கு உயிர்பெற்று உள்ளது; லீயின் தற்கொலைக் குறிப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு மீள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அவர்மீது ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் கோடிக்கணக்கான பெயர்களை நீக்கிதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையில், புது டில்லி மற்றும் மும்பையில் மாணவர் சமூகத்தின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, ஞானேஷ்குமாருக்கு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது’.

ஏறக்குறைய 10கோடி பேரின் வாக்குரிமையைத் திருடி அல்லது மறைத்து, அதாவது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது; இந்தியாவின் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவும் பீகார், ஒரிசா, தமிழ் நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் மாறுவதற்கும் காரணமானவர் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார்தான் என்றும் அவர் உடனே பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்திய தலைநகரம் புது டில்லியிலும் வர்த்தக நகரம் மும்பாயிலும் தற்பொழுது கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.

புது டில்லி உச்சநீதி மன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கும் நடைபெற்று வருவது, குறிப்பிடத்தக்கது.

மாணவர் சமுதாயம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் ‘வாக்குத் திருட்டு’ தொடர்பாக ஞானேஷ்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன என்றால், இந்த ஞானேஷ் மலேசியாவைச் சேர்ந்த ஒரு திட்ட பொறியியலாளர் லீயின் மரணத்திற்கும் காராணமாக இருந்திருப்பதாக, இப்பொழுது அதிரடி தகவல் வெளியாகி இருக்கிறது.

கேரளத்தில் நடைபெற்ற 20 ஆண்டுகள் பழைமையான இந்த சிக்கல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு கேரள மாநிலப் போக்குவரத்துத் திட்டத்தின்கீழ்(KSTP) மேற்கொள்ளப்பட்ட சாலை கட்டுமானப் பணிகளில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் அதனுடன் தொடர்புடைய மலேசிய ஒப்பந்ததாரர் ஒருவரின் மரணமும் இந்த வழக்கின் பின்னணியில் உள்ளன.

அப்போது ஞானேஷ் குமார் கேரள அரசின் பொதுப்பணித் துறைச் செயலராகப் பணியாற்றி இருக்கிறார்.

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம்(SIR) தொடர்பாக எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளை முன்வைத்து ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரம் குறித்து ஞானேஷ் குமார் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை; ஆனாலும், ஞானேஷ் குமாருக்கு எதிரான விசாரணை குறித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தகவல் தெரிவித்துள்ளார்.

கேரள அமைச்சர்கள் ரமேஷும் முரளியும்…

“20 ஆண்டுகளுக்குமுன், கேரள பொதுப்பணித் துறைச் செயலராக ஞானேஷ் குமார் இருந்தபோது அவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக காங்கிரஸ் தொண்டர் மலயின்கீழு வேணுகோபால் என்பவர், என்னிடம் ஒரு மனுவை அளித்தார்” என்று தெரிவித்துள்ளார் ரமேஷ் சென்னிதாலா.

“அந்த மனுவில் பல முக்கியமான அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே வேளையில், மலேசியத் திட்டப் பொறியாளர் லீ தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பில் அப்போதைய பொதுப்பணித் துறை செயலாளரான ஞானேஷ் குமார் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்” என்றார்.

இந்த முக்கியமான பிரச்சினை குறித்து கேரள மாநில அரசு அமைதியாக இருக்க முடியாது. என்னாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அந்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஆய்வு செய்து, சட்ட நடவடிக்கை மூலம் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதை விஜிலென்ஸ் இயக்குநரிடம் அனுப்பியுள்ளேன்” என்று ரமேஷ் சென்னிதலா மேலும் தெரிவித்துள்ளார்.

“இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. எங்கள் தலைவர் ராகுல் காந்தி பாஜகவின் தவறான ஆட்சிக்கு எதிராகப் போராடி வருகிறார் என்பது உண்மைதான். ஞானேஷ் குமார், பிரதமர் மோதி மற்றும் அமித் ஷாவின் ஒரு கருவி மட்டுமே. ஆனால் இந்த விவகாரம் அதிலிருந்து வேறுபட்டது. ஒரு அமைச்சராக, இந்த வழக்கின் விவரங்களை ஆய்வு செய்வது என் கடமை” என்றும் அவர் கூறினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்து பேசிய கேரள அமைச்சர் கே. முரளீதரன், “அவர் கேரள மாநிலத்தில் செயலராகப் பணியாற்றியபோது அவருக்கு எதிராக ஏராளமான புகார்கள் இருந்தன. இந்த முறை சில முக்கியமான நபர்கள் மேலும் பல புகார்களை அளித்துள்ளனர். அதனால்தான் அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ளது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அவருக்கு எதிராகப் பல புகார்களை அளித்துள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடைமுறை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. மறுபுறம், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஆங்கில நாளிதழான ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியின்படி, கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகிய இருவரும் தேர்தல் ஆணையத்தின் பல்வேறு முடிவுகளில் 14 முறை தங்கள் கருத்து வேறுபாட்டைப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், ஞானேஷ் குமார் இரு துணைத் தேர்தல் ஆணையர்களையும் அவர்கள் முன்வைத்த கருத்தையும் புறக்கணித்து, தன்னிச்சையாக எஸ்ஐஆர் நடைமுறையை(அதாவது வாக்காளர்களை நீக்கும் வேலையை) தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக, உச்சநீதிமன்றத்தைமீறி அவர் செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதன் அடிப்படையில், தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேலாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன்ரோ அந்தத் தொகுதியில் எல்லாம் விஜய் தலைமையிலான தவெக வென்றுள்ளது. திமுக தலைவர் தோற்கடிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியும் அவற்றுள் ஒன்று;

தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் 2029 ஜனவரி 26வரை உள்ளது. அவரது பதவிக்காலத்தில் சுமார் 20 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

2027ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களும் அவரது பதவிக்காலத்திலேயே நடைபெறும். அதன்பிறகு, 2029 மக்களவைத் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளும் அவரின் பதவிக் காலத்திலேயே(பதவியில் தொடர்ந்தால்) மேற்கொள்ளப்படும்.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத் தகவலின்படி, ஞானேஷ் குமார் 1988ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி பிரிவைச் சேர்ந்த கேரள கேடர் அதிகாரி ஆவார்.

கான்பூர் ஐஐடியில் சிவில் பொறியியலில் பி.டெக் படிப்பை முடித்த அவர், ஐசிஎஃப்ஏஐ நிறுவனத்தில் வணிக நிதியியலையும், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஹெச்ஐஐடி-யில் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தையும் பயின்றுள்ளார்.

கேரள அரசில் அடூர் துணை ஆட்சியர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கேரள மாநில வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், கொச்சி மாநகராட்சியின் ஆணையர், கேரள மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர், எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர், கோஷ்ரீ தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் செயலர், திருவனந்தபுரம் விமான நிலைய மேம்பாட்டுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர், புது டெல்லியில் உள்ள கேரள இல்லத்தின் குடியிருப்பு ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் அவர் பணியாற்றியுள்ளார்.

கேரள அரசின் செயலராகப் பணியாற்றியபோது நிதி வளங்கள், விரைவுத் திட்டங்கள், பொதுப்பணித் துறை, உணவு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் உள்ளிட்ட பல துறைகளையும் அவர் கவனித்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசிலும் பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலர், உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலர் மற்றும் கூடுதல் செயலர், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தில் செயலர், கூட்டுறவு அமைச்சகத்தில் செயலர் உள்ளிட்ட பதவிகளில் ஞானேஷ் குமார் பணியாற்றியுள்ளார்.

2024 ஜனவரி 31அன்று பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, 2024 மார்ச் 15 அன்று அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

2025 பிப்ரவரி 19-இல் அன்று இந்தியாவின் 26ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார்.
இன்றைய நிலவரப்படி, மலேசிய பொறியியலாளர் லீ சீ பீன் (Lee See Been) 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் நாளில் செய்துகொண்ட தற்கொலைக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேரடியாக காரணம் என நீதிமன்றம் உறுதிப்படுத்தவில்லை.

அவர் பெயர் லீயின் தற்கொலைக் குறிப்பில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டாலும், அந்த வழக்கு 20 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்து, தற்போது கேரள அரசு மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி:
• 2006: கேரள மாநிலப் போக்குவரத்து திட்டம் (KSTP) – உலக வங்கி நிதியுதவி பெற்ற சாலை மேம்பாட்டு திட்டம்.
• ஒப்பந்தம்: மலேசியாவின் PATI நிறுவனம், கொச்சி Bhagheeratha Constructions என்னும் நிறுவனத்துடன் இணைந்து PATI-BEL என்ற கூட்டுத் திட்டத்தை மேற்கொள்ள முடிவானது;
• பொறியாளர்: மலேசியர் லீ சீ பீன், திட்டத்தின் தலைமை பொறியாளர்.
• சம்பவம்: நிதி தாமதம், ஒப்பந்த சிக்கல்கள், அரசுத் துறையின் அழுத்தம் காரணமாக அவர் 2006 நவம்பரில் கோலாலம்பூரில் தற்கொலை செய்துகொண்டார்.
ஞானேஷ் குமாரின் பெயர் எவ்வாறு வந்தது?
• அப்போது அவர் கேரள பொதுப்பணித் துறைச் செயலர்.
• லீயின் தற்கொலைக் குறிப்பில் ஞானேஷின் பெயர் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
• சில ஊடகங்கள் இரண்டு குறிப்புகள் இருந்ததாகவும், ஒன்று மனைவிக்கு, மற்றொன்று நிறுவன இயக்குநருக்கு எழுதப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.
• குற்றச்சாட்டுகள்:
o ஒப்பந்தங்களை தனிப்பட்ட விருப்பப்படி ஞானேஷ் குமார் வழங்கியதாகவும் நிதி விடுவிப்பில் வேண்டுமென்றே தாமதம் செய்து திட்டத்தை நெருக்கடிக்கு தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் தற்கொலை செய்துகொள்வதற்கு ஞானேஷ்குமார்தான் காரணம் என்று லீ எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை
• 2026 அக்டோபர் 5: கேரள அரசு வழக்கை மீண்டும் திறந்து விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
• காங்கிரஸ் தலைவர் மலயின்கீழு வேணுகோபால் மனு அளித்ததைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, இதன் தொடர்பில் நடவடிக்கை எடுத்தார்.
• முன்னைய விசாரணை (2006): ஆரம்ப நிலையில் முதல் தகவல் அறிக்கைகூட FIR பதிவு செய்யப்படாமல் இந்த வழக்கு நிறுத்தப்பட்டது; இப்பொழுது புத்துயிர் பெற்றுள்ளது.
முக்கிய அம்சங்கள்
• இதுவரை எந்த நீதிமன்றமும் ஞானேஷ் குமாரை நேரடியாக குற்றவாளி என அறிவிக்கவில்லை.
• விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது: புதிய சாட்சிகள், பழைய ஆவணங்கள், தற்கொலைக் குறிப்புகள் ஆகியவை மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன.
• அரசியல் சூழல்: எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த வழக்கு ஞானேஷ்குமாருக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கிறது.
மொத்தத்தில், 1948-ஆம் ஆண்டு ஆடிப் பெருக்கு நாளில் பிறந்து, 2006-இல் தற்கொலை செய்துகொண்ட லீ-க்கு நியாயம் கிடைக்குமா?

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை