Monday, October 19, 2026

6-ஆவது தேசிய மிலாது நபி விழா

மலேசிய இந்திய முஸ்லிம் தேசியப் பேரவையான பெர்மிம் (PERMIM), இமிம் (IMIM), மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் பிரெஸ்மா (PRESMA) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மாபெரும் மீலாதுன் நபி மாநாடு ஆறாவது முறையாக கோலாலம்பூரிலுள்ள மாட்ரேட் மாநாட்டு மையத்தில் நேற்று, அக்டோபர் 18, ஞாயிற்றுக்கிழமை காலை சுமார்8:00 மணி முதல் இரவு 7:30 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் நாடெங்கிலும் இருந்து மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.

மாநாட்டை கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய நலத்துறை (MAIWP) தலைவர் டத்தோ சையத் கமாருல் ஸமான் பின் சையத் கபீர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.

தமிழக ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா மெளலவி P.A. காஜா முயீனுத்தீன் பாகவி, பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹம்மது ஃபாரித் ரவி பின் அப்துல்லாஹ் உட்பட பல்வேறு மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றினர்.

அழைப்பு பணியில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வரும் டாக்டர் மன்சூர் மரைக்கானுக்கு மௌலூதுர் ரசூல் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

“அறநெறி வாழ்வியல் – அருள்பெற்ற சமூகம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய உதவிய அனைவருக்கும் மாநாட்டு தலைவரும் பெர்மிம் பேரவையின் தேசியத் தலைவருமான அஸ்மான் ஷா தனது உரையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை