Sunday, October 18, 2026

மனித குலம் எஞ்ஞான்றும் போன்ற வேண்டிய மேதை:-தாமஸ் ஆல்வா எடிசன்!

இன்று நாம் ஒரு மனிதரை மட்டும் நினைவுகூரவில்லை.
இருளில் வாழ்ந்த மனிதகுலத்திற்கு ஒளியைத் தந்த ஒரு மகத்தான சிந்தனை வடிவத்தை நினைவுகூருகிறோம்.
ஆயிரம் முறை தோல்வியை சந்தித்தாலும், “நான் தோல்வியடையவில்லை; செயல்படாத ஆயிரம் வழிகளை கண்டுபிடித்தேன்” என்று தன்னம்பிக்கையுடன் உலகிற்கு பாடம் கற்றுக் கொடுத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

இன்று நம் வீட்டில் சுழலும் விசிறியின் குளிர் காற்றிலும், இரவை பகலாக்கும் மின்விளக்கின் ஒளியிலும், தொழிற்சாலைகளின் இயந்திர ஓசையிலும், மனித வாழ்க்கையை எளிதாக்கும் எண்ணற்ற கண்டுபிடிப்புகளிலும் அவர் வழங்கிய உழைப்பின் தடம் பதிந்திருக்கிறது.

அவர் வெறும் அறிவியலாளர் மட்டும்அல்லர்;
முயற்சிக்கு உருவம்,
தன்னம்பிக்கைக்கு முகம்,
மனித முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய ஒளிவிளக்கு.
ஒரு மனிதனின் சிந்தனை உலகையே மாற்ற முடியும் என்பதை தன வாழ்க்கையால் நிரூபித்தவர் எடிசன்.

அவர் அணைந்துவிடவில்லை; அவர் ஏற்றிய ஒளி இன்னும் கோடிக்கணக்கான மனங்களில் பிரகாசித்துக்கொண்டே இருக்கிறது.

“இருளை குறை கூறுவதற்குப் பதிலாக, ஒரு விளக்கை ஏற்றுங்கள்” என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உலகிற்கு கற்றுத்தந்த மாமேதைக்கு பணிவான அஞ்சலி.

அறிவியலின் அகல்விளக்கே, தாமஸ் ஆல்வா எடிசனே, நிந்தன் நினைவு மனிதகுலம் உள்ளவரை நிலைத்திருக்கும்!

வீரவணக்கம்! புகழ்வணக்கம்! நன்றிவணக்கம்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை