
உலக மக்கள் தொகையில் சுமார் 10% பேர் இடது கையைப் பயன்படுத்துவோர். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உலகம் அறியச் செய்வதற்கும், அவர்களின் தனித்துவத்தை கொண்டாடுவதற்கும் இந்த நாள் அமைந்துள்ளது.
இடது கை பழக்கம் ‘சிறப்பு’ என்பதை நினைவூட்டும் நாளாக ஆகஸ்ட் 13-ஆம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1976-இல் Dean R. Campbell என்பவர் ‘Lefthanders International Inc.’ என்ற அமைப்பின் மூலம், இடக்கை வழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார்.
இருந்தபோதும் 1992-இல் ‘Left-Handers Club’
என்னும் அமைப்பு, இடக்கை பழக்கமுடை-யோருக்காக பரந்த அளவில் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது முதல், உலக அளவில் இடக்கை பழக்கம் உடையோர் தன்னூக்கம் பெற்றனர்.
இடது கை பழக்கமுடையவர்கள் எதிர் கொள்ளும் சவால்களை உலகம் அறியச் செய்வது; அவர்களுக்கு ஏற்ற கருவிகள், கல்வி, வேலை வாய்ப்புகளில் சமத்துவம் ஏற்படுத்துவது ஆகியவை இந்த அமைப்பின் நோக்கமாக இருக்கிறது
அன்றாட வாழ்வில், கத்திகள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளி மேசைகள், சமையல் கருவிகள் போன்ற சாதனங்கள் பெரும்-பாலும் வலது கை பழக்கம் உடையோருக்-காக வடிவமைக்கப்பட்டவை.
முன்னைய காலத்தில் இடது கை பழக்கம் என்பது, ‘அசாதாரணம்’ அல்லது கோளாறு எனக் கருதப்பட்டது; சில இடங்களில் குழந்தைகளை வலது கை பழக்கத்திற்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளனர்.

தற்போதைய நிலை மாறிவிட்டது; இடது கை பழக்கத்தை தனித்துவமாகக் கொண்டாடுகிறார்கள்;
#LeftHandersDay, #InternationalLeftHandersDay போன்ற ஹாஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உலகப் புகழ்பெற்ற இடது கை பழக்கமுடைய வர்களில் அமெரிக்க மேநாள் அதிபர் பராக் ஒபாமா, அகிம்சையின் உலக சின்னம் மகாத்மா காந்தி, கால்பந்து விளையாட்டில் கோல் மன்னன் லயனல் மெஸ்ஸி, கிரிக்கெட் விளையாட்டில் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர், இந்தித் திரை உலக நட்சத்திர நாயகன் அமிதாப் பச்சன், ஜஸ்டின் பீபர் போன்றோர் இடக்கை வழக்கம் உடையவர்கள்.


