
13-ஆவது மலேசிய பெருந்திட்டத்தில் இந்தியர்களுக்கு 25 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மாட்சிமைக்குரிய மாமன்னர் பின்னர் கவனம் செலுத்தக்கூடும்.
இதன் தொடர்பில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்று கடந்த ஜனவரி மாத பிற்பகுதியில் மாட்சிமைசால் மாமன்னரிடம் மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி சார்பில் அதன் தேசியத் தலைவர் பொன் வேதமூர்த்தி தலைமையில் கடிதம் கொடுக்கப்பட்டது.
15-ஆவது நாடாளுமன்ற நான்காவது கூட்டத்தின் முதல் அமர்வு கடந்த திங்கட்கிழமை பிப்ரவரி மூன்றாம் நாள் தொடங்கியபொழுது மாட்சிமைக்குரிய மாமன்னர் மரபுப்படி உரையாற்றி தொடக்கி வைத்தார்.
ஆனாலும் மாட்சிமைச்சால் மாமன்னர் உரையில் அதைப் பற்றிய குறிப்பு ஏதும் இடம் பெறவில்லை. இருந்தபொழுதும், அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் தனிப்பட்ட முறையில் மாட்சிமைக்குரிய மாமன்னர் இதைப்பற்றி பின்னர் அறிவுறுத்துவார் என்று மலேசிய இந்திய சமுதாயம் நம்பிக்கை கொண்டுள்ளது.


