
அண்மையில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது.
நெகிரி செம்பிலான் மாநில புதிய மந்திர பெசாராக(முதலமைச்சராக) டத்தோ இஸ்மாயில் லாசிம் பதவி ஏற்றார்.
இந்நிலையில் இன்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் ஆகியோர் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்து பேச்சு வார்த்தை நடத்தினர்


