Wednesday, September 23, 2026

டத்தோ டாக்டர் ஞானபாஸ்கரன் தலைமையில். மனநல-உடல்நல கருத்தரங்கம்!

மார்பக பரிசோதனை, எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வு பரிசோதனை, இரத்த அழுத்த சோதனை, இனிப்பு நீர் குறித்த விழிப்புணர்வு, எலும்பு பரிசோதனை உள்ளிட்ட அங்கங்களுடன் சிறப்பு மருத்துவ கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மருத்துவத் துறையிலும்1980-90 ஆம் ஆண்டுகளில் அரசியலிலும் ஒரு சேர பயணித்த ஆற்றலாளர் டத்தோ டாக்டர் என். ஞான பாஸ்கரன்

அணி என்னும் பிணியில் சிக்கியதால் அரசியலில் உச்சத்தை தொடும் நல்வாய்ப்பை இழந்தாலும் பொது வாழ்விலும் மருத்துவத் துறையிலும் தொடர்ந்து சமூக நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இவருடன் மேலும் 3 மருத்துவ வல்லுனர்கள் இணைந்து நடத்தும் உடல்நல மனநல கருத்தரங்கம் வரும் அக்டோபர் திங்கள் 10-ஆம் நாள் பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் காலில் 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பெற்றோரை பேணுதலில் நிலவும் குழப்பத்தை தவிர்த்தல், மன அழுத்தத்தை விலக்குதல், மாரடைப்பு வந்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி உள்ளிட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து இந்த முழு நாள் கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

மலேசிய மருத்துவர் சங்கத்தின் மேனாள் தலைவரும் குழு பயிற்சி ஆலோசகரும் ‘Bumi Network Consultancy Sdn Bhd’ நிறுவனத்தின் ஆலோசகருமான டத்தோ டாக்டர் ஞானபாஸ்கரனுடன் மூத்த மருத்துவர் டத்தோ டாக்டர் ஆர்.எஸ். குமார், பேராசிரியரும் Malaysian Healthy Ageing Society தலைவருமான நாதன் வைத்திலிங்கம், இணைப் பேராசிரியரும் Malaysia Therapist Industry Development அமைப்பின் தலைவருமான டாக்டர் பாஸ்கரன் கொஸ்தி ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த கருத்தரங்கில் அவசரகால முதல் உதவி, சி பி ஆர் பயிற்சி, சர்க்கரை நோய்ப் புண் பராமரிப்பு, சமூக மனநல விழிப்புணர்வு, முதியோர் பராமரிப்பு, ஆரோக்கியமான முதுமைகால வாழ்க்கை முறை குறித்தெல்லாம் மருத்துவ விளக்கமும் மனநல ஆலோசனையும் வழங்கப்படும்.

குறிப்பாக, இந்த சிறப்புக் கருத்தரங்கில் பெரும்பாலான சிக்கலுக்கு நாம் வாழும் முறையிலேயே தீர்வை க் காணக்கூடிய வழிமுறை குறித்தும் ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்கப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மேற் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ நிபுணர்களுடன் நேரில் கலந்துரையாடவும்- ஆலோசனை பெறவும் வாய்ப்புளாளது.

இதில் கலந்து கொண்டு பேரளவிலான பயனை அடைய விரும்பும் பொதுமக்கள் கீழ்காணும் தொலைபேசி எண்களில் அழைக்கலாம்.

012-7810047(Pravina), 012-6050050(Shyamlee)

கட்டணம் வெ.120.00

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை